வலையொளி (You Tube ), இதனை பற்றி அறியாதவர் யாரும் இல்லை. இன்றைய காலகட்டத்தில்
அடுக்குமாடி குடியிருப்பு முதல் அடர்காடுகள் வரை அணைத்தது பகுதிகளிலும்
ஆண்ட்ராய்டு போன்களின் ஆதிக்கமே. அப்படி பட்ட ஆன்ட்ராய்டு போன்களில் முக்கிய பொழுது போக்கு அம்சமாக
விளங்குவது வலையொளி ஆகும். ஐந்து வயது குழந்தைக்கு கேளிக்கை
சித்திரம் (கார்ட்டூன்ஸ்) காட்டி சோறு ஊட்டுவது முதல் அறுபது வயது பாட்டிக்கு
பியூட்டி (அழகூட்டுதல்) செய்வது வரை அணைத்து வயதினருக்கும் சிறந்த பொழுதுபோக்கு
சாதனமாக விளங்குகிறது.இது வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல பல
லட்சக்கணக்கானவர்களின் வருமான,வாழ்வாதாரமாக மாறியுள்ளது என்றாள் மிகையாகாது. முன்பு சன்டீவி, விஜய் டிவி
சேனல்களில் மூழ்கியிருந்த நம் மக்கள் இன்று வளையொளியில் ஆளுக்கொரு தனி சேனலை
நடத்திவருகின்றனர், இதன்மூலம் வருமானமும் ஈட்டுகின்றனர். இந்தளவுக்கு குடும்ப அட்டையில்
இடப்பெறாத குடும்ப உறுப்பினரான வலையொளியின் ஆரம்ப வரலாறு தெரியுமா ???
வளையொளி, அமெரிக்க நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு காணொளி ஊடகம் ஆகும்.
சாட் ஹர்லி, ஸ்டீவ் சென், மற்றும் ஜாவேத் கரீம் என்ற மூவர் சேர்ந்து 2005 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பித்தனர்.இவர்கள் இதற்கு முன்பு PAYPAL நிறுவனத்தில் தொடக்கநிலை ஊழியராக பணிபுரிந்தவர்கள்.
ஆரம்ப காலத்தில் இது ஒரு சிறிய
செயலியாகவே அறிமுகம் செய்யபட்டது.இதன் நோக்கம் தனி நபர்கள் தான் பதிவுசெய்த
காணொளிகளை (VIDEO) இணையத்தின் உதவியுடன்
உலகம் உள்ள மக்களுக்கு பகிர்வதுக்காக
ஆரம்பிக்கபட்டது. இப்படி ஆரம்பிக்க பட்ட நிறுவனம் ஒரு
வயதினை அடையும் பொழுது , 2006 ல் கூகிள் நிறுவனத்திற்கு 1.65 பில்லியன் டாலருக்கு
விற்கப்பட்டது. கூகிள் நிறுவனம் இதனை வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்களை
கொண்டுவந்தனர். அதன் ஒரு பகுதியாக,
அன்று
சந்தைகளில் ஆண்ட்ராய்டு போன்கள் அறிமுகம் ஆயின,அந்த போன்களில்
வலையொளி செயலி ( inbuilt or
default ) கட்டாயப்பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.இது வளையொலியை அனைவரிடமும்
கொண்டுசெல்ல முக்கிய வழிவகுத்தது.
இருப்பினும் வலையொளி, இந்தியாவில் பொழுதுபோக்கு அம்சமாக மாற வேறு சில கரணங்கள் உள்ளன.
இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட
நாடுகளில் கொண்டுவரும் சின்ன சின்ன மாற்றங்கள் கூட பல நிறுவனங்களின்
வளர்ச்சிக்கு நேரடி, மறைமுக காரணங்களாக அமைகின்றன. வளையொளி, ஆண்ட்ராய்டு போன்களின் மூலமாக இந்தியாவில் அறிமுகம் ஆனா காலத்தில்
சாதாரண ஒரு செயலியாகவே கருதப்பட்டது. ஏனென்றால், வலையொளி இணையம் (INTERNET )மூலம் செயல்
படும் செயலி, மேலும் அன்றைய காலத்தில் இணைய சேவை (INTERNET
PACK ) மிகவும் விலையுயர்ந்ததாக இருந்ததால், வளையொளியை பெரிதாக உபயோகிக்கவில்லை.இப்படி இருக்க செப்டம்பர் 5,
2016 அன்று ஜியோ என்ற நிறுவனம் இலவச இணையம்,இலவச அழைப்புகள் என அறிவித்தது. இது இந்தியா வர்த்தகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்படி
அளவுக்கு அதிகமான இணையம் இருப்பதால் அனைவரும் இணையத்தில் பொழுதுபோக்கை தேட
ஆரம்பித்தனர். அப்பொழுது அனைவரின் கவனத்தை ஈர்த்தது வலையொளி.
ஏனென்றால் இது பொழுதுபோக்குடன் வருமானமும் தருவதால் இதனை அதிக மக்கள் உபயோகிக்க ஆரம்பித்தனர். இதனால வலையொளி அசுர வளர்ச்சிபெற்றது. 2006ல் வெறும் 1.65 பில்லியன் டாலருக்கு வாங்கிய நிறுவனதின் 2020ம் ஆண்டின் வருமானம் மட்டும் 19.8 பில்லியன் டாலர் ஆகும்.ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த வளையொளி இன்று அதிக பார்வையாளர்களை கொண்ட, உலக அளவில் அதிக நபர்களால் தேடப்படும் தளமாக, கூகிளிற்கு (GOOGLE )அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில உள்ளது. உலகின் தலை சிறந்த அணைத்து துறைகளை சார்ந்த நிறுவனங்கள் கூட தனக்கென ஒரு வலையொளி சேனலை ஆரம்பித்து, தங்களது நிறுவனத்தை விளம்பரம் செய்வதோடு, வருமானமும் ஈட்டி வருகின்றனர். வலையொளியில் ஒரு நிமிடத்திற்கு சுமார் 100 மணிநேர (100 Watching Hours ) காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன,ஒரு நாளைக்கு சராசரியாக வலையொளி பார்வையாளர்கள் பார்க்கும் காணொளியில் கால அளவு ஒரு பில்லியன் (1 billion ) மணி நேரம் ஆகும்.
இந்த வலையொளியை பயன்படுத்தி நாமும்
வருமானம் ஈட்ட முடியாம? முடியும் அதற்கான முக்கிய நிபந்தனைகள் :
1) உங்களது வலையொளி சேனலை குறைந்தது
1000 நபர்கள் பின்தொடரவேண்டும் (1000 subscribers )
2) நீங்கள் பதிவேற்றம் செய்யும் காணொளி
குறைந்தது 4000 மணிநேரம் (4000
watching hours) பார்வையாளர்களால்
காணப்பட்டிருக்கவேண்டும்.
இதனை பூர்திசெய்தலே நீங்களும் வலையொளி
மூலம் வருமானம் ஈட்ட தகுதியுடையவர்களே.
வலையொளியில் செய்யக்கூடாதவை :
1) வேறொருவரின் சேனலில் பதிவேற்றம்
செய்யப்பட்ட காணொளியை பதிவிரக்கம் செய்து உங்களது சேனலில் பதிவேற்றம் செய்தல்
கூடாது.
2) மிகவும் ஆபாசமான மற்றும் நிர்வாணா
காட்சிகளை வளையொளியில் பதிவேற்றம் செய்தல் கூடாது.
3) ஏற்கனவே பிரபலமான சேனலை போன்று போலி
சேனல்களை ஆரம்பித்தல், அதில்வரும் விடீயோக்களை சிறு வேறுபாடுகள் செய்து பதிவேற்றம் செய்தல்
கூடாது.
4) மேலும் சமூகத்தில் சர்ச்சைகளை
ஏற்படுத்தும் விதம் அல்லது வன்முறையை தூண்டும் வண்ணம் உள்ள காணொளிகளை பதிவேற்றம்
செய்தல் கூடாது.
இப்பொழுது இதனை வலையொளி அனுமதித்தாலும், அனைவரின்
சேனல்களின் செயல்பாடுகளை வளையொளி நிறுவனம் கவனித்துக்கொண்டே இருக்கும், எதிர்காலத்தில்
எதாவது நடைமுறைச்சிக்கல் ஏற்பட்டால் உங்களது சேனலை வலையொளி நிறுவனம்
முடக்கிவிடும்.அப்பொழுது உங்களது நீண்டநாள் உழைப்பு வீணாக நேரிடலாம் .
வளையொளி போன்ற சமூக ஊடகங்களை
ஆக்கபூர்வமாக உபயோகித்தால், இன்று உடனடியாக பிரபலம் ஆகாவிட்டால் கூட காலம் செல்ல செல்ல,நல்ல மற்றும்
ஒரு நிலையான வருமானத்தை தரும்.
ந. மகேந்திரன்
0 Comments