1) உலக அளவில் அதிக தபால் நிலையங்கள் கொண்ட நாடு இந்தியா. மொத்தம் 1,55,.015 தபால் நிலையங்கள் உள்ளன (2016),இதில் 90 விழுக்காட்டிற்கு மேல் கிராமப்புற பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2) உலகில் மிக உயரத்தில் அமைக்கப்பட்ட மட்டைப்பந்து (cricket ) மைதானம், இந்தியாவில் ஹிமாச்சல்பிரதேசத்தில் அமைந்துள்ளது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 2444 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனை பட்டியாலா புபின் சிங் என்னும் மகாராஜா 1893ல் காட்டியுள்ளார்.
3) உலகத்திலேயே முதன்முறையாக வைரம் இந்தியாவில் தான் கண்டறியப்பட்டது. 1896 ம் ஆண்டு வரை உலக அளவில் இந்தியாவில் மட்டுமே வைரம் கிடைத்தது.
4) உலக மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர், இந்து , புத்தம், சீக்கியம், சமணம் ஆகிய நான்கு மதத்தை சார்ந்தவர்களே.இந்த நான்கு மதங்களும் இந்தியாவில் பிறந்தது.
5)உலகில் முதன்முதலில் கிரானைட் பயன்படுத்தி கட்டப்பட்ட கோவில், தமிழ்நாட்டில் தஞ்சையில் உள்ள தஞ்சை பெருவுடையார் கோவில் ஆகும்.சுமார் 80 டன் அளவிலான கிரானைட் கற்கள் கொண்டு இராஜராஜ சோழனால் ஐந்து வருடத்தில் கட்டப்பட்டது.
6) இயற்கணிதம், முக்கோணவியல் போன்ற கணிதவியல் முறை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
7)உலக அளவில் மிக உயரத்தில் அமைக்கப்பட்ட பெயிலி பலம், இமயமலையில் லடாக் என்னும் பகுதியில் ட்ராஸ் மற்றும் சுரு (Dras and Suru) எனும் நதிகளுக்கு குறுக்கே அமைந்துள்ளது.கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5602 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.இது இந்திய ராணுவத்தால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
8)மிகவும் பழமையான ஐரோப்பிய தேவாலயம்
இந்தியாவில் கொச்சினில் உள்ளது.இது 1503 முதல் 1568ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டது.
9) உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் ஷாம்பு, (Shampoo) தலை முடியை கழுவ பயன்படும் நீர்மம் ஆகும்.இது முதன்முதலில் இந்தியாவிலே கண்டறியப்பட்டது.
10) உலக அளவில் அதிக ஆங்கிலம் பேசும் மக்கள் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில உள்ளது.
11)உலகத்திலேயே அதிக சைவ உணவு விரும்பிகளை கொண்ட நாடு இந்தியா. மொத்த மக்கள் தொகையில் 20 முதல் 40 விழுக்காட்டிற்கு மேல் சைவ உணவு உண்பவர்கள்.
12)உலகத்திலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. 2014ம் ஆண்டு மட்டும் சுமார் 132.4 மெட்ரிக் டன் பால் உற்பத்தி செய்துள்ளனர்.
ந.மகேந்திரன்
0 Comments