வெளியானது இந்திய பணக்காரர்களின் பட்டியல்..! ( India's Richest man's List )

இந்தியா,வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு.ஜாதி,மதம்,மொழி என பல வழிகளில் வேறுபட்டு காணப்பட்டாலும், அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்ற பிம்பத்தினால் மறைக்கப்பட்ட நாடு. இங்கு பலதரப்பட்ட கலாச்சாரங்கள் , சமய கோட்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில் வறுமை கோட்டின் விளிம்பில் சிக்கி தவிப்போர் ஏராளம்,என்றாவது ஓர்நாள் விளிம்புநிலையை தாண்டிட மாட்டோமா என்று ஏங்கியிருப்போர் பல கோடி...   

இந்தியா  - மிகப்பெரிய வர்த்தக நாடு, மற்ற நாடுகள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய மாபெரும் சந்தையாக இந்தியா விளங்குகிறது. உலக நாடுகள் உயர்வு பெற இந்தியாவை பயன்படுத்திக்கொள்கின்றன, அனால் இந்தியாவின் நிலையோ மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது.இன்றளவும் இந்தியாவில் ஒரு தனிநபரின் ஒருநாள் சராசரி வருமானம் ருபாய் 178 மட்டுமே.


இப்படி ஒருபுறமிருக்க , மறுப்புறம் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

1) கெளதம் அதானி 
அதானி குழுமம்
சொத்து மதிப்பு - 1,161,800 கோடி 

2) முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 
சொத்து மதிப்பு - 1,014,700 கோடி 

3) ஷிவ் நாடார் 
H C L 
சொத்து மதிப்பு - 314,000 கோடி 

4) சைரஸ்  எஸ் . பூனவல்லா 
சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா 
சொத்து மதிப்பு  - 289,800 கோடி 

5)திலீப் சங்கவி
சன் பாராமெடிக்கல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 
சொத்து மதிப்பு - 249,900 கோடி 

6) குமார் மங்களம் பிர்லா 
ஆதித்ய பிர்லா 
சொத்து மதிப்பு - 235,200 கோடி 

7)கோபிசந்த் ஹிந்துஜா 
ஹிந்துஜா 
சொத்து மதிப்பு  - 192,700 கோடி 

8) ராதாகிஷன் தமானி 
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் 
சொத்து மதிப்பு  - 190,900 கோடி 

9) அசிம் பிரேம்ஜி 
விப்ரோ 
சொத்து மதிப்பு -190,700 கோடி 

10) நிராஜ் பஜாஜ் 
பஜாஜ்
சொத்து மதிப்பு - 162,800 கோடி  

Post a Comment

0 Comments