நடிகர் தனுஷ் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர்.இவருக்கு கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகராக அறிமுகம் உண்டு. இருப்பினும் நடிப்பு தாண்டி மற்ற பிரிவுகளிலும் தன் முத்திரையை அவ்வப்போது பதித்து வருவார்.இந்நிலையில் இயக்குனராகவும் களமிறங்கினார் தனுஷ். 2017ம் ஆண்டு ராஜ்கிரண் அவர்களை முதன்மை கதாபாத்திரமாக வைத்து பா.பாண்டி என்ற படத்தினை இயக்கினார். இப்படத்தில் , பிரசன்னா ,ரேவதி,மடோனா செபாஸ்டின் , சாயா சிங் , மற்றும் சிறப்பு தோற்றத்தில் தனுஷ் அவர்களும் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே வெற்றிப்பட இயக்குநரானார்.
தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அவர்கள் முதல் படத்தின் நாயகனாக ராஜ்கிரண் அவர்களை வைத்துதான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.முதல் படத்தின் வெற்றிக்குப்பிறகு தனுஷ் தனது 50வது படமான "ராயன்" தானே இயக்கி நடித்திருந்தார். இப்படத்தில் தனுஸுடன் இணைத்து , சந்தீப் கிஷன் , காளிதாஸ் ஜெயராம் , எஸ்.ஜே .சூர்யா , அபர்ணா பாலமுரளி , துஷார விஜயன் , செல்வராகவன் என பலர் நடிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் படத்திற்கு இசையமைத்திருந்தார்.சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் அவர்கள் படத்தினை தயாரித்திருந்தார்.
வடசென்னை பகுதில் நடக்கும் கேங்ஸ்டர் கதை என்பதால் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான ராயன் மாபெரும் வெற்றிப்படமானது.விமர்சனங்கள் கலவையாக வந்த போதிலும் வசூல் ரீதியாக இதுவரை 150கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கலாநிதிமாறன் அவர்கள் சமீபத்தில் இரண்டு காசோலைகளை தனுஸுக்கு வழங்கி பெருமைப்படுத்தினார்.
இந்நிலையில் தனுஷ் அவர்களின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் தயாராகி வந்தாலும் , மறுபுறம் தான் இயக்கம் அடுத்த படத்தின் அறிவிப்பும் வெளியானது. அதன் படி " நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " என்ற படத்தினை இயக்கிவருகிறார். சம கால காதலை பற்றி பேசும் படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தில் மேத்திவ் தாமஸ் , அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியார்,மற்றும் சிறப்பு தோற்றத்தில் பிரியங்கா மோகன் அவர்களும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி .வி . பிரகாஷ்குமார் இசையமைக்க தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் பல வருடங்களுக்கு பிறகு இப்படத்தினை தயாரிக்கிறது.
இந்த படத்தின் "கோல்டன் ஸ்பார்ரோவ் " என்ற முதல் பாடல் தற்பொழுது வெளியாகி வைரலாகிவருகிறது.
0 Comments