G.O.A.T படத்திற்கு அஜித் வழங்கிய அறிவுரை என்ன தெரியுமா ?

டந்த ஆண்டு ( 2023 ) விஜய் - வெங்கட் பிரபு  கூட்டணியில் தொடங்கிய திரைப்படம் G.O.A.T.இப்படத்தினை AGS நிறுவனம் தயாரிக்கிறது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிவரும் The G.O.A.T படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து திரையரங்குகளில் வெளியாக தயாராகிக்கொண்டிருக்கிறது.அடுத்த மாதம் SEP -5 அன்று படம் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளும் தொடங்கிவிட்டன. 

முதற்கட்டமாக படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன, ட்ரெய்லர் வெளியீட்டிற்க்கான வேலைகள் நடந்து கொண்டிருகின்றன. படத்திற்கு இசை வெளியீட்டு விழா வைக்கப்படும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தந்தது.

இருப்பினும் அடுத்தகட்ட ப்ரோமோஷன் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த வெங்கட்பிரபு படத்தினை பற்றி பல தகவல்களை கூறினார், அதில்  ஆச்சர்யமூட்டும் தகவல் என்னவென்றால் , கடந்த ஆண்டு இந்த படத்தில் வெங்கட் பிரபு அவர்கள் ஒப்பந்தம் ஆனா பொழுது , முதல் ஆளாக நடிகர் அஜித் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு , இப்படம்  மங்காத்தா படத்தினை விட 100 மடங்கு நன்றாக வரவேண்டுமென்று கூறியுள்ளார்.

மங்காத்தா திரைப்படம் அஜித் அவர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாகும். அஜித் அவர்கர்களுக்கு 50 வது படம் மட்டுமின்றி மாபெரும் வெற்றியை தந்த படமும் கூட. தொழில் ரீதியாக விஜயும் அஜித்தும் எதிரிகள் என்ற பிம்பம் இருப்பினும் அவ்வவ்பொழுது ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டவும் செய்கிறார்கள்.இதனை வெங்கட்பிரபுவே கூறியுள்ளது, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.  

Post a Comment

0 Comments