G.O.A.T படத்தின் கதை இதுதனா ? இயக்குனரே பகிர்ந்த தகவல்

டிகர் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் தற்பொழுது G.O.A.T ( The Greatest Of All Time ) படத்தில் நடித்து வருகிறார்.இவருடன் இணைத்து பிரபுதேவா , பிரசாந்த் , அஜ்மல் மற்றும் 80'ஸ்களின் கனவு நாயகன், மோகன் அவர்களும் நடிக்கிறார். 

இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க , AGS நிறுவனம் தயாரிக்கிறது.சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றத. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைத்துவிட்டது என கூட கூறலாம். இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த வெங்கட் பிரபு படத்தினை குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். 

G.O.A.T திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை கதையே, ஆனால் அதனை உண்மைக்கு நெருக்கமாக கூற முயற்சி செய்திருக்கிறோம்.முன்பு ஒரு காலத்தில் SATS - ( Special Anti Terrorist Squad )  என்றழைக்கப்படும் அமைப்பு , RAW அமைப்போடு இணைந்து செயல்பட்டு வந்தது. அப்போது அக்குழு செய்த செயல் பின்னாளில் பெரும் பிரச்சினையாய் வர அதனை எப்படி இவர்கள் எதிகொண்டார்கள் என்பதே கதையின் கரு. இக்கதையில் விஜய் இரண்டு வித தோற்றத்தில் வருகிறார். வயது முதிர்ந்த நடுத்தர வயதினராகவும் , இளமை துள்ளல் நிறைந்த இளம்வயது நபராகவும் நடிக்கிறார். இன்றைய நவீன தொழில்நுட்பமான AI யினை கொண்டு இளம் வயது விஜயனை உருவாக்கியுள்ளனர்.இப்படம் செப்டெம்பர் 5 அன்று வெளியாக உள்ள நிலையில் விரைவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது.

Post a Comment

0 Comments