இந்தியாவின் முதல் பெண் சீரியல் கில்லர் யார் தெரியுமா? கர்நாடகாவை கதிகளங்கவைத்த பெண் கொலையாளி!

 இந்தியாவின் முதல் பெண் சீரியல் கில்லர் யார் என்று தெரியுமா? சீரியல் கில்லர் என்றவுடன்  நமக்கு வெளிநாட்டை சேர்ந்தவங்களை தான் ஞாபகத்துக்கு வரும் ஆனா, இப்ப நாம தெருஞ்சுக்கா போறது இந்தியாவையே நடுங்க வைத்த ஒரு பெண் சீரியல் கில்லர் பதித்தான் ,

 

               K  D  Kempamma ஆனால் அனைவர்க்கும்அறிமுகமான 

பெயர் சைனைட் மல்லிகா.இவர் 1990ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை 

தொடர் கொலைகளில் ஈடுபட்டவர். இந்த தகவல் வெளிவரும் பொழுது 

அனைவரின் மனதிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. பெண்மைஎன்றால் 

சாந்தம், பொறுமை , சகிப்புத்தன்மை, எனபல குணங்களில் 

வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் இப்படி ஒருவக்கர எண்ணமும்உள்ளது 

என்பது   பலரை ஆச்சரியத்துக்கு ஆளாக்கியது.


சயனைடு மல்லிகா என்னும் கெம்பம்மா பிறந்தது கர்நாடகா மாநிலம் , பெங்களூரை அடுத்துள்ள கங்களிப்புரா என்னும் கிராமம் ஆகும். இவர் அதே பகுதியை சேர்ந்த டைலர் ஒருவரை திருமணம் செய்தார். இருவருக்கும் திருமணமான சில மாதங்களிலே திருமண வாழ்க்கை கசந்தது , இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் நாளடைவில் அதுவே வீண் சண்டையாக மாறியது.கெம்பம்மா தான் வசித்து வந்த பகுதியில் சீட்டு ஒன்று நடத்தி வந்தார், அதில் நஷ்டமும் அடைந்தார். இதையே காரணமாக காட்டி அவரது கணவர் கெம்பம்மாவை  ஒதுக்க ஆரம்பித்தார், பின்னர் 1998ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர் , இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர், கணவர் பிரிந்த பிறகு வருமானமின்றி தவித்த கெம்பம்மா அருகில் இருந்த வீடுகளில் வீட்டு வேலைக்கு சென்றாள். அப்பொழுதுதான் GOLD ஸ்மித் என்பவருடன் அறிமுகம் ஆகிறாள். அவன் நகை கடையில் பழைய நகைகளை புதிதாக்குதல், மற்றும் திருட்டு நகைகளை விற்று தரும் முகவராகவும் இருந்தான். இவனின் அறிவுறுத்தலின் பெயரில் கெம்பம்மா தான் பணிபுரியும் வீடுகளில் சிறு சிறு பொருட்களை திருட ஆரம்பித்தாள்.அன்று அவளுக்கே தெரியாது பின்னாளில் பணத்தின் மீது கொண்ட மோகத்தால் தான் ஒரு கொலையாளி ஆவோம் என்று. இப்படி சிறு சிறு திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த கெம்பம்மா 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் முதல் கொலையில் ஈடுபட்டார். கர்நாடக மாநிலத்தில் hoskote என்னும் இடத்தில மம்தா ராஜன் என்ற 30வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை அவள் அணிந்திருந்த நகைக்காக கோவிலில் வழிபட்டு கொண்டிருக்கும் போது கொலைசெய்தார் கெம்பம்மா. சிறிது நாட்களுக்கு  பிறகு 2001ல் கெம்பம்மா கைது செய்யப்பட்டார், அனால் கைதானது வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்க்காக, அப்பொழுது யாருக்கும் தெரியாது இவள் ஒரு கொலைக்குற்றவாளி என்று. சிறையில் அடைக்க பட்ட கெம்பம்மா 6 மாத கால தண்டனை முடிந்த பிறகு விடுவிக்கபட்டார். அப்பொழுது அவளுக்கு இருந்த ஒரே கேள்வி, தான் கொலை செய்தபோது மாட்டவில்லை , வழிப்பறியில் ஈடுபட்ட போதே பிடிபட்டோம், ஆகையால் தொடர் கொலைகளில் ஈடுபட முடிவு செய்தாள். பெங்களூரின் புற நகர் பகுதியில் உள்ள அதிக கூட்டம் வாரத கோவில்களை  கவனிக்க தொடங்கினால், குடும்ப பிரச்சனை காரணமாக மன ஆறுதல் வேண்டி வரும் பெண்களை குறிவைக்க தொடங்கினாள். அவர்களுடன் பேச ஆரம்பிப்பாள், ஆறுதல் கூறுவதுபோல் நெருக்கம் ஆவாள், குடும்ப பிரச்சனைகளை தெரிந்து கொள்வாள், பின்னர் இவளே ஒரு தீர்வை கூறுவாள், பரிகார பூஜை செய்யவேண்டும் என்பாள், அதற்க்கு விலையுயர்ந்த ஆபரணங்களை  அணிந்து வர சொல்லுவாள், பூஜையில் வழங்கும் பிரசாதத்தில் சயனைடு களப்பாள், அதை உண்டு அவர்கள் மயங்கிய பிறகு ஆடை நகைகளை எடுத்துக்கொள்வாள்.இங்கு அனைவர்க்கும் ஒரு கேள்வி எழலாம்?, இவளுக்கு சயனைடு எங்கிருந்து கிடைத்தது என்று,கெம்பம்மாவின் கூட்டாளி  GOLD ஸ்மித் என்பவர், பழைய நகைகளை பாலிஷ் செய்வதற்க்காக பயன்படுத்தும் சைனைடையே கெம்பம்மா கொலை செய்ய பயன்படுத்தினாள்.இவள் இந்த முறையை பயன்படுத்தி 2006ம் ஆண்டு அக்டோபர் 10 முதல் டிசம்பர் 18க்குள் 5திற்க்கும் மேற்பட்ட பெண்களை கொலை செய்தாள்.

அவர்களின் விவரம் பின்வருமாறு,

1)எலிசபெத் (52 வயது )

2)யசோதம்மா (60 வயது )

3)முனியம்மாள்  (60 வயது )

4)எலகங்க (60 வயது )

5)நாகவேணி (30 வயது )

6)ரேணுகா ( 22 வயது )

இதில் கடைசி பெண் ரேணுகா கோலார் மாவட்டத்தில் பில்கிரின் சென்டர் என்னும் பகுதியில் உள்ள கோவிலில் டிசம்பர் 7,2006ல் கொல்லப்பட்டார். இந்த ரேணுகா கொலையே  கெம்பம்மா பற்றி வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியது.ரேணுகா, மணி என்பவரின் சகோதரி, தன் கணவர் துபாயில் வேலை செய்ததால், தன் சகோதரர் மணி வீட்டில் தங்கியிருந்தாள்.அவளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், அடிக்கடி கோவில் செல்லும் பழக்கம் உள்ளவள், மேலும் கெம்பம்மா மணி வீட்டில் வேலைசெய்துள்ளாள், இதுவே இவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது, டிசம்பர் மாதம் மணி வேலைகாரணமாக வெளியூர் சென்றார், அதனை பயன்படுத்தி  கெம்பம்மா ரேணுகாவை கொலைசெய்தாள், டிசம்பர் 26ல் ரேணுகாவின் கணவர் சங்கர் நாடு திரும்பினார், அதன் பிறகே ரேணுகா காணவில்லை என்பதை அரிந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.காவல்துறையினர் விசாரணையில் ரேணுகா, கெம்பம்மா இருவரும் அடிக்கடி கோவில் செல்வது தெரியவந்தது, ஆகையால் விசாரிக்க கெம்பம்மாவை தேடிய பொழுது அவள் தலைமறைவனாது தெரியவந்தது,பின்னர் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை, ஓராண்டுக்கு பிறகு 2008 டிசம்பர் மாதம் ரேணுகாவின் நகையை விற்க செல்லும்போது காவலர்களால் கைது செய்யப்பட்டால், அந்த நேரத்தில் தான் ஜெயம்மா என்றும் அது தன் நகை என்றும் கூறினால், ஆனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர், அப்பொழுது ரேணுகா கொல்லப்பட்டது தெரியவந்தது, கெம்பம்மாவின் வாக்குமூலத்தின் படி தேடி பார்த்ததில் இரண்டு உடல்கள் கண்டுபுடிக்கப்பட்டது, அதில் ஒன்று ரேணுகா இன்னொன்று யார் என்று தெரியவில்லை, கர்நாடக மாநிலத்தில் பல காணவில்லை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இது யார் என்று தெரியவில்லை. இதனை அறிய காவல்துறையினர் ஒரு முடிவு செய்தனர், அதன் படி கெம்பம்மாவின் புகைபடத்தை வெளியிட்டு இவரை பற்றி தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளுமாறு வலியுறுத்தினர். அதன் பின் நடந்தது காவல்துறையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்கள் எதிர்பாத்தது, யாரேனும் ஒருவர் வருவர் என்று ஆனால் 5திர்க்கும் மேற்பட்ட பெண் காணமல் போன வழக்கில் கெம்பம்மாவுக்கு தொடர்புள்ளது என்று.இது வெளிவந்த நாட்களில் கர்நாடக மாநிலமே பெரும் அதிர்வில் இருந்தது, பெண்கள் நகை அணிய, அறிமுகம் இல்லாத நபர்களிடம் நட்புகொள்ளவே அஞ்சினர்.இறுதியாக 5 கொலைவழக்குகள் கெம்பம்மா மீது தொடரப்பட்டது , அதில் 2010ல் முனியம்மாவை கொன்றதற்காக மரண தண்டனை வழங்கப்பட்டது.பின்னர் 2012ல் நாகவேணி கொலைக்குற்றத்திற்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.


கர்நாடகாவில் ஒரு பெண்ணிற்கு இரட்டை மரணதண்டனை வழங்கப்பட்டதும் இதுவே முதல் முறை. இன்றுவரை கெம்பம்மா சிறையில் உள்ளார் ,மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் 2017ல் V .K சசிகலா (சின்னம்மா) அவர்கள் சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார், அப்பொழுது அவரின்  பக்கத்து அறையில் இருந்தவள் கெம்பம்மா. கெம்பம்மா பலமுறை சசிகலாவிடம் பலமுறை பேச முயற்சித்தால், ஒருமுறை சசிகலாவிற்க்காக வரிசையில் நின்று உணவு வாங்கிக்கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை குறித்து எந்த தகவலும் இல்லை. இன்று சசிகலா விடுதலை பெற்று தமிழ்நாட்டில் சென்னையில் உள்ளார்.

இன்றைய காலத்தில் பணம் என்னும் காகிதத்தின் மீது கொண்ட மோகமே பெரும்பாலான குற்றத்திற்கு வழிவகுக்கிறது. பணத்தின் மீது கொண்ட மோகம் தவிர்த்து மனிதம் காப்போம்.   

 

மனித வாழ்வில் பணம் என்பது முக்கியமான ஒன்றுதான், ஆனால் பணம் மட்டுமே முக்கியமல்ல, பணம் என்னும் காகிதத்தின் மீது கொண்ட மோகமே இன்று நாடக்கும் பல குற்றங்களுக்கு தொடக்க புள்ளி.பணத்தின் மீது கொண்ட மோகம் தவிர்த்து மனிதம் காப்போம்.

Post a Comment

0 Comments