கொல்லம் அருகில் நடந்த கொடூரம்.....விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்....வீணாக பறிபோன மூன்று உயிர்....முகநூல் மோகத்தால் நேர்ந்த சோகம்....

 

2021 ஜனவரி மாதம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாத்தனுர் என்னும் ஊரில் ஒரு இரப்பர் தோட்டத்தில், பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தை வீசி எறியப்பட்ட நிலையில் காவல்துறையினர் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்தது.பிறகு இதனை கொலை வழக்காக பதிவுசெய்த காவல்துறையினர்,அந்த பகுதியில் இருந்த அனைவரிடமும் விசாரணை செய்தனர். விசாரணையில்  எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் அருகில் இருந்த அனைவரின் மரபணு மாதிரிகளை சேகரித்து சோதனை செய்து பார்த்தனர். இதன்படி ஜூன் மாதம் குழந்தை கண்டெடுக்க பட்ட பகுதியின் அருகில் இருந்த ரேஷ்மா என்பவரே குழந்தையின் தாய் என்பதை அறிந்தனர்.

ரேஷ்மா ஒரு திருமணம் ஆனா பெண், இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.ரேஷ்மா வீட்டில் தனியாகவே குழந்தையுடன் இருந்துள்ளார்.குழந்தையின் தாய் ரேஷ்மா என்பதை அறிந்த காவல் துறையினர் ,அவரை கைது செய்து விசாரணையை தொடங்கினர்.

ரேஷ்மா தனியாக இருக்கும் போது பெரும்பாலும் முகநூலில் பொழுதைபோக்கியுள்ளார்.ஒன்றுக்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகளை பயன்படுத்துயும் வருகிறார். அந்த நேரத்தில் தான் அனந்து பிரசாத் என்பருடன் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் அதிகநேரம் முகநூல் உரையாடலில் ஈடுபட்டுவந்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்துள்ளது. இருவரும் கணவன் மனைவிபோல் பேச ஆரம்பித்துள்ளனர்.தனிமையில் இருந்த ரேஷ்மாவிற்கு ஆறுதலாக வந்த அனந்து பிரசாத்தை மிகவும் பிடித்துவிட்டது.எந்தளவிற்கு என்றால், அனந்து  ஒரு நாள், நான் உன்னை என்  மனைவியாக  ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் ஒரு குழந்தையுடன் இருந்தால் மட்டுமே, என்றுள்ளான்.இதனால் ரேஷ்மா தான் இரண்டாவதாக கருவுற்றிருப்பதை யாரிடமும் குறிப்பாக கணவரிடம்மும், கணவரின் வீட்டாரிடமும் கூட கூறவில்லை. சிறிது நாட்களுக்கு பிறகு இரண்டாவது குழந்தையை பெற்ற ரேஷ்மா, முகநூல் காதலன் மீது கொண்ட மோகத்தால், தான் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள இரப்பர் தோட்டத்தில் வீசி சென்றுள்ளார்

இதில் பெரும் சோகம் என்னவென்றால் தனது முகநூல் காதலனை ஒருமுறை கூட ரேஷ்மா பார்த்ததில்லை என்பதே.இதனை தெரிந்துகொண்ட காவல்துறையினர், சைபர்துறையினரின் உதவியுடன் அனந்து பிரசாத்தின் முகநூல் கணக்கு மூலம் இருப்பிடத்தை தேடினர். இதன் பின் மேலும் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் தெரியவந்தன.

ஆர்யா (23 வயது ), கிரிஷ்மா (22 வயது )   என்ற ரேஷ்மாவின் உறவினரான இரண்டு பெண்கள் முகநூலில் அனந்து பிரசாத் என்னும் பெயரில் போலியான கணக்கை தொடக்கி ஒரு ஆன் நண்பரை போல் பேசி வந்துள்ளனர். ரேஷ்மாவை கேளிக்கை செய்யவேண்டும் என்ற நோக்கிலேயே இதனை ஆரம்பித்துள்ளனர்.இதனை அறியாத ரேஷ்மா, முகநூல் காதலனை மிகவும் நம்பியுள்ளார்.இதன் விளைவாக தான் ஈன்ற, கருவறை வாசம் கூட மறந்திராத பச்சிளம் குழந்தையை கொலை செய்யும் அளவு சென்றுள்ளார்.

சைபர்த்துறையின் உதவியுடன், ஆர்யா மற்றும் கிரிஷ்மாவின் இருப்பிடத்தை அறிந்த காவல்துறையினர், அவர்களை கைது செய்ய சென்றனர்.இதனை அறிந்த இரண்டு பெண்களும் மனமுடைந்து, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.அவர்களின் உடல்களை கூட காவல்துறையினரால் கண்டறிய முடியவில்லை.தற்பொழுது ரேஷ்மா கைது செய்யப்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 


இன்று பலரும் விளையாட்டாக செய்யும் ஒரு செயல், மாபெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது.தேவையற்ற முகநூல் சகவாசம்,பிராங்க் போன்ற கேளிக்கை நிகழ்வு இன்று கேரளாவில் மூன்று உயிர்களை காவுவாங்கியுள்ளது.இதில் எந்த வித தவறும் செய்திராத பச்சிளம் குழந்தையும் அடங்கும். இந்த சம்பவம் கொல்லம் பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments