2023 ம் ஆண்டு வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் "விடுதலை" படத்திலும், 2024 ம் ஆண்டு துரை செந்தில்குமார் அவர்களின் இயக்கத்தில் " கருடன் " படத்திலும் கதையின் நாயகனாக நடித்திருந்தார் சூரி.இந்த இரண்டு படந்தாலுமே மக்கள் தாண்டி விமசகர்கள் வரை பெரும் வரவேற்பைப்பெற்றது. அதிலும் இந்தாண்டு வெளியான கருடன் திரைப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது.இந்த வெற்றிக்கு பிறகு சூரி தொடர்ந்து கதையின் நாயகனாகவே நடிக்க முடிவுசெய்துவிட்டார்.
அதன்படி தற்போது விடுதலை பாகம் இரண்டு மற்றும் "கூலாங்கல்" படத்தினை இயக்கிய வினோத்ராஜ் அவர்களின் இயக்கத்தில் " கொட்டுக்காளி " என இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறார்.முன்னதாக வினோத்ராஜ் இயக்கிய கூலாங்கல் திரைப்படம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொட்டுக்காளி படமும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் இப்படத்தில் டிரெய்லர் வெளியாகியுள்ளது. வெளியான சிறிது நேரத்துலேயே பலரது கவனத்தை ஈர்த்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகையான "அன்னா பென் " அவர்கள் நடித்துள்ளார்.இப்படம் 23 ஆகஸ்ட் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
0 Comments