கேரளத்தில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல்(anchal)
எனும் பகுதியை சேர்ந்த தம்பதி, விஜயசேனன் மற்றும் மணிமேகலா, இவர்களுக்கு
உத்ரா(23 வயது ) என்ற உடல் ஊனமுற்ற பெண்ணும்
உள்ளார்.அதே பகுதியை சேர்ந்த சுராஜ், வங்கியில்
பணிபுரிந்து வந்தார். இவர் உத்ராவை பார்த்து காதல் கொள்கிறார், உடனே உத்ராவின் தந்தையிடம் , உங்களின் மகளை
எனக்கு பிடித்துள்ளது, அவளை நான் திருமணம் செய்துகொள்ள
விரும்புவதாக கூறினான், உத்ராவின் தந்தையோ,வங்கி ஊழியர், தன் மகள் ஊனமுற்றவள்,தாமாகவே வந்து மணக்க விருப்பம் தெரிவிக்கிறான் , போன்ற காரணங்களுக்காக சம்மதம் தெரிவிக்கிறார்.
பின்னர் இருவீட்டாரின் முன்னிலையில்
மிகவும் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. தன் மகளின் மகிழ்ச்சிக்காக 100 சவரன் தங்க நகை, புதிய கார், மற்றும் 3.5 ஏக்கர் நிலம் போன்றவற்றை வரதட்சணையாக
வழங்கினார்.ஆரம்பத்தில் அனைவரை போல உத்ராவின் இல்லறவாழ்க்கை மகிழ்வுடனே
ஆரம்பித்தது.சுராஜும் நன்றாகவே பார்த்துக்கொண்டான், நாட்கள் செல்ல செல்ல சுராஜின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.
ஏதாவது ஒரு காரணத்தை கூறி தனக்கு பணத்தேவை அதிகம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை
ஏற்படுத்தினான் சுராஜ். இதை பொய்யென்று
அறியாத உத்ரா, தன தந்தையிடம் இருந்து பணத்தினை பெற்று
சுராஜிற்கு கொடுத்துள்ளார். நாளடைவில் இது வாடிக்கையாக மாறியது.இதுவரை சுமார் 10
இலட்சம் வரை ரொக்கமாக வாங்கியுள்ளான் சுராஜ்.
இவ்வாறு இரண்டு ஆண்டுகள் முடிந்தன,
உத்ராவிற்கு ஒருவயது மகனும் உள்ளான். சிறுக
சிறுக பணம் கேட்டுவந்த சுராஜ், இம்முறை வரதட்சணையாக பெற்ற 100 சவரன் நகையை விற்க முடிவு செய்தான், ஆனால் இதற்கு உத்ரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந்நிலையில்
உத்ராவின் பெயரில் காப்பீடு ஒன்றினை தொடங்கினான்.சில மாதங்களுக்கு பிறகு 2 மார்ச் 2020 அன்று, விஜயசேனனை தொடர்புகொண்ட சுராஜ், உத்ராவை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன், அவளை பாம்பு கடித்துவிட்டது , மிகவும் மோசமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளேன் என்றான்.இதனை கேட்டு
அதிச்சியடைந்த விஜயசேனன் உடனே மருத்துவமனை விரைந்தார். அங்கு சுராஜ் கூறியது,
விடிந்து அதிக நேரம் ஆகிய பின்பும் உத்ரா தன
அறையில் இருந்து வராததால், அறையை திறந்து பார்த்தோம், அவள் மயங்கிய நிலையில் இருந்தால், அறையில் கண்ணாடி விரியன்(Russell's Viper ) என்ற நச்சு
பாம்பு இருந்தது, அதுதான் கடித்துவிட்டது என்றான்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு உத்ரா
மீட்கப்பட்டார். ஆனால் பாம்பின் விஷம் உடல் முழுதும் பரவியிருந்ததால் படுத்த
படுக்கை நிலைக்கு சென்றாள் உத்ரா.இதனால் உத்ராவை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும்
என்பதற்காக, உத்ராவின் தந்தை வீட்டிற்கு
அனுப்பிவைத்தான் சுராஜ். அடிக்கடி தனது மாமனாரின் வீட்டிற்கு சென்று உத்ராவை
பார்த்துவந்தான்.இவ்வாறு இருக்க,7 மே 2020 அன்று காலை உத்ரா தனது அறையில் இறந்த நிலையில் காணப்பட்டார்.இதனை
பார்த்த உத்ராவின் பெற்றோர் அதிர்ந்து போனர்.ஆசை ஆசையாய் வளர்த்த மகள்,கண்முன் உயிரற்ற உடலாய் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் மூழ்கினர். 2
மாதத்திற்கு முன்புதான் கண்ணாடிவிரியன் கடித்து,
மரணம் வரை சென்று, நெகிழி அறுவை சிகிச்சை (plastic surgery ) செய்து 52 நாட்கள் படுத்த படுக்கையாக இருந்த மகளை
மீண்டும் நாக பாம்பு (indian cobra) கடித்து
உயிர்பிரித்துள்ளது.
இதன்பின் சுராஜின் நடவடிக்கையில்
உத்ராவின் தந்தைக்கு சந்தேகம் எழ ஆரம்பித்தது.ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு
தான் உத்ராவின் மீது காப்பீடு செய்யப்பட்டது,உத்ராவிற்கு நாகதோஷம் உள்ளது, அதனால் தான் இரண்டுமுறை பாம்புக்கடித்து இறந்துள்ளார் என்று
அனைவரிடமும் கூறிவந்துள்ளான்,அடுத்ததாக உத்ராவின் அறை குளிர்வூட்டு
சாதனம் பொருத்தப்பட்டுள்ளது ஆகையால் வெளியிருந்து பாம்பு உள்ளே வர வாய்ப்புகள்
இல்லை, மேலும் சுராஜ் எப்பொழுதும் காலை தாமதமாக எழும்
பழக்கம் உள்ளவன்.ஆனால் உத்தர இறந்த அன்று அதிகாலையிலேயே எழுந்து வெளியே
சென்றுவிட்டான்.இது போன்ற விஷயங்கள் சுராஜின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால் மே 21 2020 அன்று விஜயசேனன், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிலும் குறிப்பாக தனது மருமகனின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகார் செய்தார்.இதன் படி முதல் பிரதியாக கருதப்பட்ட சூரஜினை காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக கூறியதால்,காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் சுராஜின் தொலைபேசியை சோதனை செய்து பார்த்தனர், அதில் பாம்பினை கொண்டு எப்படி கொலைசெய்வது போன்று பல காணொளிகளை இணையத்தில் தேடியது தெரியவந்தது, மேலும் வ வ சுரேஷ் என்பவனிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. சுரேஷ் கொல்லம் பகுதியில் பாம்பினை பிடிப்பது, கடத்துவது, விற்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவன் என்பது தெரியவந்தது.
பின்னர் சுரேஷிடம் விசாரணையை
தொடங்கினர் , அதில் அவன் கூறியது, சுராஜ் தன்னிடம் வந்து, உடல் ஊனமுற்ற
மனைவியுடன் குடும்பம் நடத்துவது மிகவும் கஷ்டமாக உள்ளது,அதனால் அவளை கொலைசெய்ய பாம்பு வேண்டும் என்றான், அதற்காக கண்ணாடி விரியன் மற்றும் நாகபாம்பு இவற்றை முறையே 10,000
ரூபாய்க்கு விற்றுள்ளான்.
அதன் பின் சுராஜ் நடந்த அனைத்தையும் காவல்துறையினரிடம் கூறினான்.உத்ராவின் நகைகளை விற்க முடிவுசெய்தேன், ஆனால் அதற்கு உத்ரா எதிர்ப்பு தெரிவித்ததால்,அவளை கொலைசெய்ய திட்டம் தீட்டினேன்.இதனால் பாம்பினை பயன்படுத்தி கொலை செய்ய முடிவு செய்து சுரேஷிடம் கண்ணாடிவிரியன் பாம்பினை வாங்கினேன், அதனை உத்ராவின் அறைக்குள் விட்டேன், மேலும் அதனை உத்ரா அறியாமல் இருக்க அவளுக்கே தெரியாமல் தூக்கமாத்திரையை பயன்படுத்தி தூங்க வைத்தேன்.அனால் முதல் முயற்சியில் அவள் இறக்கவில்லை இதனால் இம்முறை நாகப்பாம்பினை வாங்கினேன், பொதுவாக நாகப்பாம்புகள் எளிதில் மனிதர்களை கடிக்காது என்பதால், அதனை இரண்டு வாரங்கள் வரை உணவின்றி துன்புறுத்தி, மிகவும் ஆக்ரோஷமான நிலைக்கு மாற்றி,உத்ராவின் அறைக்குள் விட்டு கொலைசெய்ததாக ஒப்புக்கொண்டான்.மேலும் மார்ச் 2 அன்று முதல் முறையாக உத்ராவை பாம்பு கடித்த அன்றே வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 100 சவரன் நகையை எடுத்து, அதில் பெருமளவு நகையை விற்றுவிட்டான். இதன் பின் சுராஜின் வீட்டில் நடத்திய சோதனையில், அருகில் இருந்த இரப்பர் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 38 சவரன் நகையை மீட்டனர்.
கொலை முயற்சி மற்றும் பல்வேறு
பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்து, சூரஜினை கைது
செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
என்னதான் கடுமையான தண்டனை வழங்கினாலும் போன உயிர் திரும்ப போவதில்லை, இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்தில் தன்னை உயர்ந்தவன் என்று காட்ட, கெளரவம்,அந்தஸ்து,போன்ற அர்த்தமற்ற வார்த்தைகளுக்காக , கடன் வாங்கி அதிக வரதட்சணை கொடுப்பதும், அதிக வரதட்சணை வாங்குவதும் பெரும் குற்றம் ஆகும். இது மேலும் பல குற்றங்களுக்கு அடித்தளமாக அமையும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு உதாரணம்.
நவீன மயமான, நாகரீகம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் கூட வரதட்சணை வேண்டாம் என்று
யாரது கூரினால் , அவனுக்கு ஏதோ குறை உள்ளது என்று குறைகூறும் அவளநிலை
மாறும் வரை வரதட்சணை ஒழியாது.
"முதுகெலும்புள்ள எந்த ஆண்மகனும் தன்
விலா எலும்புக்கு விலைபேசமாட்டான்"
0 Comments