இந்திய திரைத்துறையில் மிகமுக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் "விஜய்" அவர்கள், இதுவரை 67 படங்களில் மட்டுமே நடித்து முடித்துள்ள நிலையில் 68 வது படமான " தி கிரெடேஸ்ட் ஆப் ஆல் டைம் " விரைவில் வெளிவரவுள்ளது.
இவர் சமீபத்தில், தான் திரைத்துறையில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும், கட்சி பெயரினையும் தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. திரைத்துறையில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
உச்ச நிலையில் இருக்கும் ஒரு கலைஞன் அதனை தவிர்த்துவிட்டு மக்கள் பணிசெய்ய வருகிறார் என ஒருபுறமும் , சில நூறு கோடிகள் சம்பாரித்த நடிகர் இன்று பல ஆயிரம் கோடிகள் சம்பாரிக்க வருகிறார் என மறுபுறமும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த அறிவிப்பு நடிகர்கள், ரசிகர்கள் தாண்டி அரசியல் கட்சிகளிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பலவித நெருக்கடிகளும் விஜய் அவர்களுக்கு அளிக்கப்பட்டும் வருகிறது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் அவர்கள் 2026 தேர்தலை நோக்கி தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். அதன் அடுத்தகட்டம் தான் இன்று 22.08.2024 தனது கட்சியின் கோடி மற்றும் கட்சி பாடலை வெளியிடவுள்ளார்.
ஆரம்ப காலத்தில் பெரிதும் விமர்சிக்க பட்ட திரைத்துறையில் கோலூன்றி தனது வெற்றியை பதித்தது போல் , அரசியலிலும் விமர்சனங்கள் தாண்டி சாதித்து காட்டுவாரா , காலம் கூறும் இதற்கான பதிலை...
0 Comments