இன்று இந்தியா தனது 78வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது.நாட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டிய நேரமிது , ஆனால் சில வாரங்களுக்கு முன்னாள் தான் கேரள மாநிலத்தில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆழ்துயரில் ஆழ்த்தியது. அதில் இருந்து மீண்டுவரும் வேளையில் மேலுமொரு துயரசம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது.நாடுமுழுதும் அமைதி நிலவவேண்டிய இந்நாளில் பல இடங்களில் நீதி கேட்டு தெருவில் இறங்கி போராடும் அவலநிலை ஏன் ? என்னதான் நடந்தது ?
மேற்குவங்காள மாநிலம் , கொல்கத்தா நகரில் உள்ளது , ஆசியாவின் முதல் தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை என்ற பெருமைக்குரிய R .G . KAR MEDICAL COLLEGE AND HOSPITAL. இம்மருத்துவமனையில் 08.ஆகஸ்ட் 2024 அன்று இரவுநேர பணியில் இருந்தவர் , இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் பயிற்சி மருத்துவர் நிர்பயா ( வயது 31 ).அன்று இரவு பணியில் இருக்கும் பொழுது மருத்துவ கல்லூரி செமினார் அறையில் நண்பர்களுடன் இரவு உணவை உண்டுள்ளார். பின் அனைவரும் பணிக்கு திரும்பிய நிலையில் நிர்பயா மட்டும் அங்கு ஓய்வெடுத்துள்ளார்.மறுநாள் காலை சென்று பார்க்கும் பொழுது இரத்த வெள்ளத்தில் உடல்முழுக்க காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இது உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து , முதற்கட்ட விசாரணையை தொடங்கினர், சம்பவ இடத்தில Bluetooth Earphone கிடைத்துள்ளது . பின்னர் நிர்பயாவின் உடல் உடற்கூராய்விற்கு அனுப்பப்பட்டது. இந்த தகவல் வெளிவந்த சிலமணி நேரம் முதலே ஆங்காங்கே போராட்டமும் வெடித்தது, நாடு முழுதும் போராட்ட கலமாய் மாறியது. அணைத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் காலத்தில் இறங்கி நீதி வேண்டி போராட தொடங்கினர். தற்பொழுது இது நாடே கவனிக்கும் ஒரு முக்கிய குற்றமாக மாறியது. காரணம் ஏனென்றால் ஒரு பெண்ணிற்கு தான் பணியாற்றும் இடத்தில் , படிக்கும் இடத்தில கூட பாதுகாப்பு இல்லையெனில் நாம் பெற்ற சுதந்திரம் எதற்கு?
நிர்பயாவின் உடற்கூறாய்வு முடிவின் படி ,
💔.அவளது உடலில் உள்ள காயங்களின் தன்மையை காணும் பொழுது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டிருக்க வேண்டும்.
💔.பிறப்புறுப்பில் உள்ள காயங்கள் சித்தரவதை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது,மேலும் பிறப்புறுப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட திரவத்தின் அளவு 151 கிராம். இந்தளவை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.
💔.தைராயிடு சுரப்பி உடையுமளவுக்கு கழுத்து நெறிக்கப்பட்டுள்ளது.
💔.அவள் அணிந்திருந்த கண்ணாடி உடைந்து கண்களில் குத்தியதால் , இரண்டு கண்களிலிருந்தும் இரத்தம் கொட்டியுள்ளது.
💔.சுவற்றில் தலையை மோதியதில் , தாடை மற்றும் தலைப்பகுதியில் முறிவுகள் உள்ளன.
💔.கால்கள் 90 டிகிரி அளவுக்கு கிழிக்கப்பட்டு இடுப்பு எலும்பில் முறிவுகள் ஏற்படுமளவுக்கு துன்புறுத்தப்பட்டுள்ளாள்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையில், மருத்துவமனை செமினார் அறையில் CCTV கேமிராக்கள் எதுவும் இல்லை , இருப்பினும் வெளிப்புறம் இருந்த கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் ஒரு சிலர் மீது மட்டும் சந்தேகம் எழுந்துள்ளது.சந்தேக படும் நபர்களை வரவழைத்ததில் குற்றவாளியை கண்டறிய , குற்றச்சம்பவ இடத்தில கிடைத்த bluetooth earphone யை பயன்படுத்தினர். அதில் சஞ்சய் ராய் என்பவன் கைபேசியில் ஆன் செய்தவுடன் earphone இனைந்துவிட்டது. மேலும் இவன் மருத்துவமனையினுள் வரும்பொழுது earphone உள்ளது. 40 நிமிடங்கள் கழித்து வெளியில் செல்லும்போது earphone இல்லை. இது மேலும் உறுதிப்படிதியது இவன்தான் குற்றவாளியென்று.
சஞ்சய் ராய் , நான்கு முறை திருமணமானவர், மூன்றுமுறை இவரது மனைவிகள் இவனை விட்டு பிரிந்து சென்றுவிட , நான்காவது மனைவி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இவர் காவல்துறையில் கீழ்மட்ட தற்காலிக உதவியாளராக பணியாற்றி வருகிறான். இதனால் கல்லூரியில் பல முக்கியமான அறைகளில் கூட இவனுக்கு அனுமதியுள்ளது. தற்பொழுது கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள சஞ்சயிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதில் யார் யாருக்கு தொடர்புள்ளது என பின்னாளில் தெரியவரும்.
இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையே பிற்காலத்தில் பெண்களுக்கு எதிரே குற்றம் புரிய அச்சமூட்டவேண்டும். " கடுமையான தண்டனை மட்டுமின்றி தாமதமில்லா தண்டனையுமே குற்றங்களை குறைக்க வழிவகுக்கும்.
0 Comments