கோயம்புத்தூரில் கோலாகலமாக நடக்கப்போகிறது மெய்யழகன் இசைவெளியீட்டு விழா !

இயக்குனர் பிரேம்குமார் அவர்கள் விஜய் சேதுபதியை கதாநாயகனாகவும் , திரிஷாவை கதாநாயகியாகவும்   வைத்து 96 என்ற படத்தினை இயக்கினார். இப்படம் 2018ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. 80 மற்றும் 90களில் நடக்கும் , நடந்த காதல் கதையை மையமாக கொண்ட இப்படம், திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி , ரசிகர்கள் விமர்சகர்கள் என அனைவரின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றி கண்டது.

இப்படத்தின் வெற்றி , இதே படத்தை தெலுங்கில் இயக்கம் வாய்ப்பை  பிரேம்குமாருக்கு  பெற்றுத்தந்தது.தெலுங்கில் ஜானு என்ற பெயரில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானட் ம், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்திருந்தனர். படத்திற்கு தமிழில் இசையமைத்த கோவிந்த் வசந்த் தெலுங்கிலும் இசையமைத்திருந்தார் , ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறவில்லை. 

இதன் பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் கார்த்தி யை வைத்து மெய்யழகன் என்ற படத்தினை இயக்கிவருகிறார. இப்படத்தில் கார்த்தியுடன் இணைத்து அரவிந்தசாமி மற்றும் ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் கார்த்திக் இதற்க்கு முன் நடித்த 25வது படமான ஜப்பான் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது. தோல்வியையும் தாண்டி சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டது.

முந்தய படங்களில் தோல்வியை பார்த்த இயக்குனரும் கதாநாயகனும் இணைந்து இப்படத்தில் எப்படியாவது வெற்றியை பதிவு செய்திடவேண்டும்  என அயராது உழைத்து வருகின்றனர்.மெய்யழகன் படத்தின் அணைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் , படத்தின் வெளியீட்டுக்கு விளம்பர வேலைகள் தொடங்கிவிட்டன. முன்னதாக படத்தின் முதல் பார்வை புகைப்படம் வெளியிடப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 31) கோயம்புத்தூரில், கொடிசியா டி ஹாலில் நடைபெறவுள்ளது.  

இப்படத்தினை சூர்யா - ஜோதிகா அவர்களின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments