நடிகர் விஜய் அவர்கள் தான் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளம் தாண்டி தொலைக்காட்சி ஊடகம் வரை அணைத்து இடங்களிலும் விவாத பொருளாக இருந்துவருகிறார்.அவரது அரசியல் வருகை தமிழக அரசியல்வாதிகளின் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பலர் அச்சத்தில் உள்ளனர் என்பது அவரை பற்றி அவதூறு பரப்புவோரின் எண்ணிக்கையை காணுகையிலே அறியலாம்.
நடிகர் விஜய் அவர்கள் இந்தாண்டு பல அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறார், அதில் குறிப்பிடத்தக்கவை ,
💛.முன்னதாக அவர் இரண்டு படங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாக அறிவித்தார்,
💛.தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியினை ஆரம்பித்து,2026ல் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்,
💛.சமீபத்தில் கட்சி கொடியினை அறிமுகம் செய்துவைத்தார்,
💛.இதன் அடுத்தகட்டமாக தனது கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி , வி சாலை பகுதியில் செப்டெம்பர் மாதம் 23ம் தேதி நடக்கவுள்ளது.இதற்கு பாதுகாப்பு வேண்டி விழுப்புரம் மாவட்ட காவல் ஆணையரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.மனுவை ஏற்ற காவல் ஆணையர் , மாநாடு நடக்கும் இடத்திற்கு த.வெ.க. கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.மாநாடு நடக்கும் இடத்தின் முன்னேற்பாடுகள் , வாகனம் நிறுத்துமிடம் , உணவுக்கூடம் ,பற்றி கட்சியினர் காவல்துறையினருக்கு விளக்கமளித்துள்ளனர்.
"கூடிய விரைவில் மாநாட்டில் விஜயின் அரசியல் பேச்சை கேக்கலாம்"
0 Comments