தெலுங்கு திரையுலகம் தாண்டி தமிழ் , கேரளம் , கன்னடம் என மற்ற மாநிலங்களிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் " மகேஷ் பாபு " அவர்கள். சில மாதங்களுக்கு முன்புதான் இவர் நடிப்பில் "குண்டூர் காரம் " என்ற திரைப்படம் வெளியானது. தற்பொழுது S S ராஜமௌலி அவர்களின் இயக்கத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 2019ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்படம் "தி லைன் கிங்" (ஆங்கில அனிமேஷன் திரைப்படம்). தற்பொழுது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் சிம்பா வின் கதையை படமாக்கிய நிலையில் இந்த பாகத்தில் சிம்பாவின் தந்தையான முபாச வின் கதையை படமாக்கியுள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அணைத்து தரப்பினரும் எதிர்பாக்கும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு மகேஷ் பாபு அவர்கள் டப்பிங் பேசியுள்ளார்.

2019ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் தமிழ் பதிப்பில்  நடிகர் சித்தார்த் , அரவிந்த்சாமி , ரோபோ சங்கர் , சிங்கம்புலி போன்ற முன்னணி கலைஞர்கள் டப்பிங் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments