நடிகர் சூர்யா நடிப்பில் , வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில் தயாராக இருக்கும் திரைப்படம் "வாடிவாசல் ".இது ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதையாகும். இதற்காக பிரேதேகமாக காங்கேயத்திலிருந்து காளைகள் வரவழைக்கப்பட்டு , சூர்யா அவர்களின் வீட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது.மேலும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவது போன்ற காட்சிகளுக்கு அனிமேட்ரானிக்ஸ் எனும் தொழிநுட்பம் பயன்படுத்தவுள்ளது.
அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் அவர்கள் வடிவாசலை இயக்க இருந்தார் , அனால் முந்தய ஒப்புதல் காரணமாக சூரியை கதையின் நாயகனாக வைத்து " விடுதலை " படத்தினை இயக்கச்சென்றார்.வெற்றிமாறன் படப்பிடிப்பின் பொது காட்சிகளை மெருகேற்றிக்கொன்றே இருப்பார். இது அவரது முந்தய படத்திற்கும் பொருந்தும் . இந்த வகையில் அவர் மெருகேற்றியது விடுதலை படத்தின் நீளத்தை அதிகப்படுத்துவது. அதன் பின் விடுதலையை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார். அந்த வகையில் மார்ச் 31 2023 அன்று "விடுதலை - முதல் பக்கம் " வெளியானது. படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருந்தார்.
மக்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.குறிப்பாக சூரி மற்றும் விஜய் சேதுபதி அவர்களின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்த சேத்தன் , அனைவரது வெறுப்பையும் பெற்றுக்கொண்டார் , அந்தளவுக்கு அவரது நடிப்பு , நடிப்பென தெரியா வண்ணம் இருந்தது.இந்த வெற்றி அடுத்த பாகத்திற்க்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தது. இது வெற்றிமாறன் அவர்களுக்கு மேலும் அழுத்தம் தர , ஏற்கனவே படமாக்கப்பட்ட காட்சிகளையும் நீக்கிவிட்டு கதையில் மாற்றங்கள் செய்து மீண்டும் இயக்கி வருகிறார். இந்த பாகத்தில் சூரிதான் நாயகனா என சந்தேகம் வருமளவுக்கு அவ்வளவு கதாபாத்திரங்கள் உள்ளன . இதுவரை விடுதலை பாகம் இரண்டின் படப்பிடிப்பு முடியாது நீடிக்கிறது.
இதனை முடித்த பிறகு வெற்றிமாறன் , வடிவாசலுக்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில் , இதற்க்கு முன் தனுஷை வைத்து இயக்கிய வடசென்னை படத்தில் " ராஜன் " என்ற கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது. வடசென்னை படமே இரண்டாவது பாகம் இதுவரை தொடங்காமல் உள்ள நிலையில் , மைய கதாபாத்திரமான ராஜனை மட்டும் வைத்து " ராஜன் வகையறா " என்ற முழு படத்தினை இயக்க உள்ளாராம். வடசென்னையில் ராஜனாக அமீர் மிரட்டிய நிலையில் அவரது காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளதாம்.
எனவே ராஜனின் இளம் வயது காட்சிகள் மட்டும் கென் கருணாஸ் அவர்களைவைத்து இயக்கவுள்ளாராம். இந்த செய்தி குறித்த சந்தேகங்கள் பல இருப்பினும் , இச்செய்தி உண்மையாகும் பட்சத்தில் வாடிவாசலுக்கு இப்போதைக்கு பூட்டுபோடப்பட்டுள்ளது.
0 Comments