ராயன் படத்தின் வெற்றிக்கு தயாரிப்பாளர் கலாநிதிமாறன் வழங்கிய பரிசு என்ன தெரியுமா ?

நடிகர் தனுஷ் , தனது 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.இது இவர் இயக்கும் இரண்டாவது படமாகும், இதற்க்கு முன் , ராஜ்கிரண் , ரேவதி , பிரசன்னா அவர்களை வைத்து பா. பாண்டி என்ற படத்தினை இயக்கியிருந்தார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே வெற்றிப்பட இயக்குநரானர். மேலும் ராயன் இப்படத்தில் , எஸ்.ஜே.சூர்யா , சந்தீப் கிசன் , காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி , துஷார விஜயன் , செல்வராகவன் ,என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.       ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு மேலும் உதவியுள்ளது.

 26 ஜூலை 2024 அன்று வெளியான இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. வடசென்னையை கதையின் களமாக கொண்டு கேங்ஸ்டர் படமாக வெளியாகி இருந்தது. படத்தின் மீதான விமர்சனம் கலவையாக இருந்தாலும் , வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. உலகமெங்கும் வசூல் சாதனை படைத்தது. இதுவரை மொத்தமாக 150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

திரையரங்குகளில் வசூல் வேட்டையாடிய ராயன் தற்பொழுது அமேசான் ப்ரைம் OTT தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் அவர்கள் இரண்டு காசோலைகளை தனுஷ் அவர்களுக்கு வழங்கியுள்ளார். 

"எதற்கு இரண்டு காசோலைகள்  என யோசிக்கையில் ஒரு வேலை இயக்குனர் தனுஷுக்கு ஒன்னு , நடிகர் தனுஷுக்கு ஒன்னு என கூறியுள்ளார் கலாநிதிமாறன்"

Post a Comment

0 Comments