இயக்குனர் P S வினோத்ராஜ் இயக்கத்தில் நாளை (23.08.2024) வெளியாகவுள்ள திரைப்படம் "கொட்டுக்காளி". சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவர் மத்தியிலும் கவனம் ஈர்த்தது. இதற்கு முன்பு இவர் இயக்கிய "கூழாங்கல்" என்ற படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வாறி குவித்தது.இந்த படமும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.
கொட்டுக்காளியில் , கதையின் நாயகனாக சூரி அவர்கள் நடித்துள்ளார். கதையின் நாயகியாக "கும்பளாங்கி நைட்ஸ் " "கப்பேலா" போன்ற மலையாள படங்களில் நடித்த அண்ணா பென் அவர்கள் நடித்துள்ளார். இப்படத்தினை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தனது SK Productions நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.இப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இவர் பேசியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இப்படத்தினை படகுழிவினருடன் இணைத்து நடிகர் கமலஹாசன் அவர்கள் பார்த்துள்ளார். படத்தினை பார்த்து கமலஹாசன் அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.
"கொட்டுக்காளி குழுவினரின் அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவுக்கதை ஒன்று சொல்லியிருக்கிறார்கள்.சாளரல்லாத சிறையாக தமிழ் சினிமாவை பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது.புதிய பார்வையாளர்களும், புதிய படைப்புகளும் பல்கி விட்டார்கள்".
நடிகர் கமலஹாசன் அவர்கள் தற்பொழுது சிவகார்த்திகேயன் அவர்களை வைத்து "அமரன் " என்ற படத்தினை தயாரித்து வருகிறார் , மேலும் விரைவில் இப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments