வெளியானது இயக்குனர் மாரி செல்வராஜின் "வாழை" திரைப்படத்தின் ட்ரெய்லர் ..!


 மாரி செல்வராஜ் , தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர்.சமூகம் , மனிதம்,ஜாதிய பாகுபாடு, அரசியல் போன்றவற்றில் தன்னுடைய நிலைப்பாட்டினை மிகவும் அழுத்தமாக கூறக்கூடியவர்.இவர் அறிமுகமான " பரியேறும் பெருமாள் " படமே இதற்க்கு சாட்சி.தனது முதல் படத்திலேயே, தான் ஒரு சிறந்த இயக்குனர் என முத்திரை பதித்தவர்.எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி வெளியான இப்படம் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.தங்களை உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் சலனத்தையும் ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இரண்டாவதாக நடிகர் தனுஷ் அவர்களை வைத்து " கர்ணன் " என்ற படத்தினை இயக்கினார். இப்படத்திலும் ஜாதிய என்றதாழ்வு , பற்றிய தனது நிலைப்பாட்டினை மிகவும் அழுத்தமாக கூறியிருந்தார். இம்முறை சற்று வன்முறையை சேர்த்தும் கூறியிருந்தார்.இருப்பினும் தனுஷின் அபார நடிப்பு நம்மை கட்டியிட்டு படத்தினை வெற்றி படமாக மாற்றியது.

கர்ணனுக்கு பிறகு மாரிசெல்வராஜ் , உதயநிதி அவர்களுடன் இணைத்து "மாமன்னன் " என்ற படத்தினை இயக்கினார். இதில் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பஹத் பாசில் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழகத்தின் பிரதான காட்சிகளில் ஒன்றான ஊர் கட்சியில் இருந்த பட்டியலின மக்கள் பிரதிநித்துக்கு(MLA) அக்கட்சியில் நிகழ்த்த கசப்பான நிகழ்வினை மையமாக வைத்து உருவானதே மாமன்னன்.இப்படத்தில் பஹத்  மற்றும் வடிவேலுவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இம்மூன்று படங்களுக்கு பிறகு, பெரிய பெரிய நடிகர்களும் கூட இவரது படத்தில் நடிக்க ஆர்வம் காட்டிய பொழுதிலும்கூட , சிறுவர்களை மட்டும் கதையின் நாயகர்களாய் வைத்து வாழை என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் , நிகிலா விமல் , திவ்யா துரைசாமி ,கலையரசன் மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.வழக்கம் போல் தனது சமூகம் கடந்து வந்த பாதையின் கடினங்களை பற்றி மிகவும் அழகாக காட்டியுள்ளார்.இப்படம் இம்மாதம் 23ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.




Post a Comment

0 Comments