யார் இந்த எலோன் மஸ்க்??? எலோன் மஸ்க் பற்றி நாம் அறிய வேண்டிய சில விஷயங்கள்..!

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக,மின்சாரத்தை கொண்டு இயங்கும் கார்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முதன்மையான நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனத்தின் CEO எலோன் மஸ்க், இவரை பற்றி நாம் அறிய வேண்டிய  சில விஷயங்கள்...!

 

1)ஜூன் 28, 1971 ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் இரோல் மஸ்க்,மாயே மஸ்க் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தவர் எலோன் மஸ்க். இவரது சகோதரி டாஸ்கா , சகோதரர் கிம்பல்.

2) தென்னாப்பிரிக்காவில் பிறந்த இவர், தனது 17வது வயதில், தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார்.

3) எலோன் மஸ்க் சிறு வயதிலேயே கணிப்பொறி ப்ரோக்ராம்மிங்கில் (Computer Program) ஆர்வம் கொண்டவராக இருந்தார், அதனை கற்கவும் செய்தார்.இதன் விளைவு தனக்கு 12 வயது இருக்கும் பொழுது, தனது முதல் கணிப்பொறி விளையாட்டான ப்ளாஸ்டர்( BLASTER ) 500 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்தார். இது விண்வெளி தொடர்புள்ள விளையாட்டாகும். கணிப்பொறி போலவே விண்வெளி பயணத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர் எலோன் மஸ்க்.

4). 1995ம் ஆண்டு எலோன் மஸ்க், தன் சகோதரனுடன் இணைந்து, தந்தையிடம் இருந்து பெற்ற 28,000 அமெரிக்க டாலரினை கொண்டு, ஜிப்2( ZIP 2 ) என்ற மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார். இது உள்ளூர் செய்திதாள்களை இணையத்தில் அறிமுகம் செய்ய பெரிதும் உதவியது.

5).பின்னர் x.Com என்ற இணையதளத்தை தொடங்கினார்,அதனுடன் உலகநாடுகளுக்கு இடையே பணப்பரிவர்த்தனை செய்யும் கணிப்பொறி செயலியான paypal 1999ம் ஆண்டு வாங்கினார். அதிக பண பரிவர்த்தனை இதன்மூலம் நடைபெறுவதால் e pay நிறுவனம் பின்னாளில் இதனை வாங்கியது.

6). ஸ்பேஸ் எக்ஸ் ( Space X ) திட்டத்தின் மூலம்,விண்வெளி பயணம் தொடர்பான ஆராச்சியை மேற்கொண்டார், இதில் பெருமளவு முதலீடு செய்துள்ளார்.செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அழைத்து செல்லவேண்டும்,விண்வெளியை ஒரு சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

7).ஹைபர் லிங்க்,(HYPER LINK ) என்கிற அதிவேக தொடர்வண்டி பயணத்திட்டத்தினை 2013ம் ஆண்டுஆரம்பித்தார், இதன் மதிப்பீடு சுமார் 6 பில்லியன் டாலர்கள் ஆகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மணிக்கு 700 மைல் வேகத்தில் பயணித்தல் வேண்டும்.இது நடைமுறைக்கு வர இன்னும் பல வருடங்கள் ஆகும்.


8).2016ல் ஸ்மார்ட் சிட்டி என்னும் திட்டத்தில் அதிகளவு முதலீடு செய்தார். இது அமெரிக்காவின் மிகவும் பெரிய சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் இடமாகும்.இத்திட்டத்தில் 15000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.இன்றுவரை இதில் எலோன் மஸ்க் அதிகளவு பங்குகளை வைத்துள்ளார்.

9).எலோன் மஸ்க் ஒரு தலைசிறந்த முதலீட்டாளராக இருந்தாலும், தன்னை ஒரு பொறியாளராகவே காட்டிக்கொண்டார்,பல திட்டங்களில் இவர் முதலீடு செய்ததோடு மட்டுமில்லாமல்,தலைமை பொறுப்பேற்றும் நடத்தியுள்ளார்.

10).AI என்ற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு செயலியில், அதிக கவனம் செலுத்தி வருகிறார்.கூகிள் நிறுவனமும் இதில் அதிக கவனம் செலுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.எதிர்காலத்தில் AI தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சி பெரும் என்பது இவரின் கூற்று.

11).இன்றைய நாளில் எலோன் மஸ்கின் சொத்துமதிப்பு 222 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Post a Comment

0 Comments