சுதா கொங்கரா தமிழ் திரைப்பட இயக்குனர்களில் முக்கியமானவர். இவர் இதற்க்கு முன்பு " இறுதிச்சுற்று " ,"சூரரை போற்று " போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.சமீபத்தில் சூரரை போற்று படத்தினை ஹிந்தியில் அக்ஷய்குமாரினை வைத்து இயக்கியிருந்தார். படத்திற்கு விமர்சனங்கள் நன்றாக இருந்தாலும் வியாபார ரீதியாக பெரிதும் வெற்றிபெறவில்லை.
இதனையடுத்து சுதா தமிழில் மீண்டும் சூர்யாவை நாயகனாக புறநானுறு என்ற படத்தினை இயக்க இருந்தார்.அதற்கான முதற்கட்ட பணிகள் வெகு வேகமாக நடைபெற்ற நிலையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கறுத்து வேறுபாடு காரணமாக , சூர்யா அவர்கள் இப்படத்தில் இருந்து விலகி தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதை அறிந்த பலரும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து சுதா கொங்கராவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்றும், இல்லை சிவகார்த்திகேயன் நடிக்க போகிறார் என்றும் பல தகவல்கள் உலாவருகின்றன . இருப்பினும் அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளிவரவில்லை.இப்படி இருக்கையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் லோகியை முழு நீள வில்லனாக திரையில் காணலாம். இப்படம் முந்தைய காலகட்டத்தில் ஏற்பட்ட ஹிந்தி எதிப்பு போராட்டத்தினை மையப்படுத்திய கதையை களமாக கொண்டு தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments