தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் அவர்களின் நடிப்பில் , "தடையற தாக்க", "தடம்", "கலகத்தலைவன் " போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அவர்களின் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் (04.10.2023) படப்பிடிப்பு தொடங்கியது. இதற்க்கு "விடாமுயற்சி " என பெயரிடப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் அவர்கள் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் இது. ஒண்டரை ஆண்டுகள் கடந்தும் , இந்திராவும் படப்பிடிப்பு முடிவடையவில்லை.
அதற்க்கு பல்வேறு காரணங்களும் கூறப்பட்டன. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ஒரே சமயத்தில் , கமலஹாசன் அவர்களை வைத்து "இந்தியன் 2" படத்தினையும் , ரஜினிகாந்த் அவர்களை வைத்து " வேட்டையன் " படத்தினையும் தயாரித்து வந்தது. அதில் குறிப்பாக இந்தியன் 2 படம் எதிர்பார்த்த பட்ஜெட்டினை தாண்டி பலமடங்கு அதிகரித்துவிட்டது. இதனால் அந்நிறுவனம் பெரும் நிதி தட்டுப்பாட்டில் சிக்கியது.அதன்பின் இயக்குனருக்கும் நடிகருக்கும் இடையேயான கருது வேறுபாடு மற்றும் , இப்படம் கதைப்படி பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் ( azerbaijan ) படமாக்கவேண்டிய நிலையில் அங்கு ஏற்பட்ட காலநிலை மற்றும் போன்றவைகளும் படப்பிடிப்பினை தாமதப்படுத்தியது.
இவற்றையெல்லாம் பார்த்து பொறுமையிழந்த அஜித் அவர்கள் , அடுத்த படத்திற்கான வேளையில் இறங்கினார்.அந்த படத்தினை " த்ரிஷா இல்லனா நயன்தாரா " ,"AAA ", "மார்க் ஆண்டனி " படங்களை இயக்கிய அதிக்ரவிசந்திரன் இயக்கவுள்ளார். அதற்கு "குட் பேட் அஃலி " என தலைப்பு வைத்துள்ளனர். இதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்து , தற்பொழுது ஹைதராபாதில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் விடாமுயற்சி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அஜித் அவர்கள் எந்த படத்திற்கு முன்னுரிமை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , ஒரே சமயத்தில் பகல் முழுக்க ஒரு படமம் , இரவு முழுக்க மற்றொரு படம் என நடித்து வருகிறார், இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை அஜித் அவர்களின் திரைப்பயணத்தில் இப்படி பணியாற்றயதே இல்லை , இதுவே முதல் முறை.
0 Comments