அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் ??? பரிசீலனை பட்டியலில் சூர்யா / சிம்பு / விஜய்சேதுபதி..!

விஜய் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது.இதுவரை 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் , இந்தாண்டு ( 2024 ) 8வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.இந்த சீசன் தொடக்கத்திலேயே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இதுவரை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு , தனது தனிப்பட்ட காரணத்தினால் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவதாக அறிவித்தார்.இந்த அறிவுப்பு ரசிகர்களை தாண்டி , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

விஜய் தொலைக்காட்சிக்கு இந்த ஆண்டு ( 2024 ) மிகவும் ஏமாற்றமளிக்கும் ஆண்டாகவே இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தான் , மற்றுமொரு வெற்றி நிகழ்ச்சியான " குக் வித் கோமாளி " யில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட் , KPY குரேஷி ,சிங்கர் பரத் மற்றும் மோனிஷா ஆகியோர் வெளியேறினர். ஆளுக்கு ஒரு காரணம் கூறினாலும் இந்த விலகல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அவர்கள் வெளியேறிய பின்னர் இந்நிகழ்ச்சி முன்பை போல் பெரிதாக அனைவரையும் ஈர்க்கவில்லை. இந்நிலையில் தான் கமலஹாசன் அவர்களின் அறிவிப்பு விஜய் தொலைக்காட்சியில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இப்பொழுது கமலஹாசன் அவர்களின் இடத்தை யார் நிரப்புவார் என்ற பெரும் கேள்வியும் எழுந்துள்ளது, இதுவரை கமலஹாசன் அவர்கள் தனக்கே உரித்தான புரிந்தும் புரியாத மாறி பேசுவது , பல உள்ளர்த்தங்களை கொண்ட கருத்தை ஒருவரியில் சொல்வது போன்று சிறு சிறு விஷயங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இத்தகைய இடத்தை நிரப்ப இப்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூரிய , சிம்பு, மற்றும் விஜய்சேதுபதி ஆகியோரின் பெயர் பரிசீலனையில் உள்ளது.நடிகர் சூரியா அவர்கள் இதே தொலைக்காட்சியில் முன்னதாக  " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி " நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சூர்யா இதிலிருந்து விளக்கியுள்ளார், மேலும் அடுத்தகட்டமாக விஜய் சேதுபதி அவர்கள் தேர்வாகியுள்ளார். இது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம் , சேதுபதி அவர்களின் எதார்த்தமான பேச்சு எளிய மக்களிடமும் எளிதாக சென்றுவிடும். கூடிய விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம் ,

சேதுபதி அவர்களின் குரலில் " இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது" பிக்பாஸ். 



Post a Comment

0 Comments