பிரபல தொலைக்காட்சியான விஜய் டீவீயில் மிகவும் பேசப்பட்ட மற்றும் வெற்றியடைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இந்நிகழ்ச்சி முதன்முதலில் 2017ல் ஒளிபரப்பப்பட்டது.அன்று முதல் 2023 வரை 7ஆண்டுகளில் 7 சீசன் முடிவடைந்துவிட்டது.இதுவரை அணைத்து சீசன்களையும் உலகநாயகன் "கமலஹாசன் " அவர்கள் தொகுத்து வழங்கினார், நிகழ்ச்சியும் பெரிய அளவில் வெற்றிபெற்றது.இதனை தொகுத்து வழங்க கமலஹாசன் அவர்களுக்கு அதிக சம்பளமும் வழங்கப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கரு என்னவென்றால் " ஒரு வீட்டினுள் மீடியா செலிபிரிட்டிக்கல் ,பொதுமக்களுள் தனித்திறன் மிக்கவர் ,சினிமாவில் இருந்து ஓய்வுற்றவர் என அனைத்து தரப்பினரையும் 100 நாட்கள் தங்கவைத்து ,சிறு குறு வேலைகளை குடுத்து அதன் மூலம் ஒரு மனிதனின் உண்மை முகத்தினை வெளிக்காட்டும் நிகழ்ச்சியே பிக்பாஸ் ".இது நம் அன்றாட வாழ்வில் கடந்து செல்லும் நட்பு , காதல் , துரோகம் , வக்கிரம் ,சோகம் ,அழுகை,புன்னகை என அனைத்தையும் கண்முன் காட்டிவதால் ஆரம்ப காலகட்டத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இவ்வளவுநாளாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் அவர்கள் இந்தாண்டு (2024) , பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து "கணத்த இதயத்துடன்" வெளியேற போவதாக அறிவித்தார் . அவர் அறிவித்த கணம் முதல் வலைத்தளங்களில் சர்ச்சைகளும் வெடிக்க தொடங்கியது. பலவகையான காரணங்கள் பல திடுக்கிடும் நம்பஇயலாத காரணங்களும் வலைத்தளத்தில் உலாவற ஆரம்பித்தது. இவற்றிக்கு மத்தியில் உண்மை காரணம் யாதெனில் ,
கமலஹாசன் அவர்கள் , நடிகர் ,இயக்குனர் ,கதாசிரியர் ,நடன இயக்குனர் என பன்முகம் கொண்டிருப்பினும் அவர் ஒரு சிறந்த தொழில்நுட்ப கலைங்ஞனும் கூட.தான் வாழும் இச்சினிமாவில் எப்பொழுதும் புது புது முயற்சிகளை செய்யக்கூடியவர் . வெற்றி தோல்வி தாண்டி அவரது முயற்சியும் , அவர் அறிமுகப்படுத்தும் தொழில்நுட்பமும் காலம் தாண்டி இன்றளவும் பேசுபொருளாக உலாவிக்கொண்டிருப்பது நாம் அறிந்ததே.அந்த வகையில் இன்று "AI ( Artificial Intelligence ) " என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. உயர்தர வாகன உற்பத்தி முதல் சிறிய அளவு உள்ள தொழில்கூடங்கள் வரை AI பல வகையில் செயல்பட்டு வருகிறது.இது ஆபத்து நிறைந்த ஒன்றாக இருந்தபோதிலும் இப்பொழுது மிகவும் பயனுள்ளதாக அனைவராலும் கருதப்படுகிறது. இத்தகைய AI தொழில்நுட்பத்தை சினிமா துறையில் எவ்வாறு பயன்படுத்தலாம் மற்றும் AI நுணுக்கங்கள் குறித்து 90 நாட்கள் அமெரிக்க நாட்டிற்கு சென்று கற்க உள்ளார் கமலஹாசன் அவர்கள்.
இதுமட்டுமின்றி , கல்கி ( AD 2898 ) திரைப்படம் மாபெரும் வியாபார ரீதியான வெற்றியடைத்ததையொட்டி அதன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளனர்.தற்போது பணியாற்றிவரும் மணிரத்தினம் அவர்களின் "THUG LIFE " திரைப்படம் இன்னும் முடிவுறவில்லை.இதற்கு முந்தய ஒப்புதல் கொடுத்த "அன்பறிவு( சண்டை பயிறிச்சியாளர் )" அவர்களின் திரைப்படமும் விரைவில் தொடங்கவுள்ளது.இப்படி அணைத்து தரப்பிலிருந்தும் நெருக்கடிவரவே வேறு வழியின்றி பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளார். இருப்பினும் இது பெரிய ஏமாற்றம்தான் பிக்பாஸ் ரசிகர்களுக்கு.
0 Comments