தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கொலை வழக்கு......
காவல்துறை மற்றும் தடவியல்துறை என
அனைவரையும் பெரும் அவதிக்குள்ளாகிய வழக்கு......
ஆம், 1952ம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதல் மும்பை வரை பெரிதும் பேசப்பட்ட வழக்கு, எந்தளவுக்கு பிரபலமும், பிரச்னையும்,ஏற்படுத்தியது என்றால், அன்றைய காலகட்டத்தில் மிக பிரபலமான தொலைக்காட்சியான தூர்தர்சனில் ஒரு நாடகமாகவே ஒளிபரப்பு செய்தனர். கொலை செய்யப்பட்டவர் பெயர் ஆளவந்தார். அன்றைய காலகட்டத்தில் சென்னையில் சிறந்து விளங்கிய ஜெம் & கோ (GEM and CO ) என்ற பேனா நிறுவனத்தின் முகவராக வேலை செய்து வந்தார்.அவருக்கு சென்னையில் பாரி முனை பஜாரில் சொந்தமாக பேனா கடை உள்ளது. அதுமட்டுமின்றி தவணை முறையில் புடவை வியாபாரமும் செய்து வந்தார்.இவர் பிரித்தானிய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
ஜெம் அண்ட் கோ நிறுவனத்தின் முதலாளி
எம்.சி . குன்னன் குட்டி,1952ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில்
காவல்துறையில் ஒரு புகார் அளித்தார், அதில் குறிப்பிட்டிருந்தது
என்னவென்றால், தனது நிறுவனத்தில் பேனா விற்பனை முகவராக இருந்த ஆளவந்தார் என்பவரை
ஆகஸ்ட் மாதம் 28ம் நாளில் இருந்து காணவில்லை என்பதாகும். இந்த வழக்கு பதிவு செய்து சில நாட்களுக்கு பிறகு, சென்னையில்
இருந்து தனுசுகோடி வரை செல்லும் ,
சிலோன் விரைவு தொடர்வண்டியில் மூன்றாம்
வகுப்பில் மிகவும் மோசமான துர்நாற்றம் வீசுவதாக ரயில்வே காவலர்களுக்கு தகவல்
வந்தது.தொடர்வண்டி மானாமதுரை சந்திப்பை அடைந்தவுடன் காவல்துறையினர் அந்த பகுதி
முழுவதும் சோதனை செய்தனர். அதில் ஒரு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வருவதை
அறிந்து அதனை திறந்துபார்த்தனர். அதில் இருப்பதை கண்டு காவல்துறையினர் சற்று அதிர்ந்து
போனர்.அப்படி அந்த பெட்டியில் என்னதான் இருந்தது.
தலை தனியாக வெட்டி எடுக்கப்பட்ட உடல்
மட்டும் இருந்தது, அதுவும் கைகள், கால்கள், தனித்தனியாக வெட்டப்பட்டு அந்த
பெட்டியில் இருந்தது.இதனை காணும் பொழுது அனைவர்க்கும் தோன்றிய ஒரே எண்ணம் மிகவும்
மூர்க்கத்தனமான முறையில் தான் இவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று.மேலும் அந்த
தொடர்வண்டியில் எங்கு தேடியும் தலை கிடைக்காததாள், யார் கொல்லப்பட்டார் என்றே காவலர்களால் கண்டறிய முடியவில்லை.பின்னர்
இந்த உடலை உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர். அதில் தெரிவிக்கப்பட்டது
என்னவென்றால், இந்த உடல் 25 வயது மதிக்கத்தக்க ஒரு முஸ்லீம் நபருடையது என்று இருப்பினும் தலை
கிடைக்காததால் விசாரணையை எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியாமல், தடுமாறிக்கொண்டிருந்தனர் காவல்துறையினர்.
இத்தகைய சூழ்நிலையில் சில தினங்களுக்கு
பிறகு சென்னையில் ராயபுரம் கடற்கரை பகுதியில் சட்டையில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு
மனித தலை கரை ஒதுக்கியுள்ளது.இதனை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்விற்கு
அனுப்பிவைத்தனர். பின்னர் மானாமதுரையில் கிடைத்த தலையற்ற உடலுக்கு சொந்தமானதாக
இருக்குமோ என்ற சந்தேகத்தின் பெயரில், இரண்டையும்
ஒப்பீடு செய்துபார்த்தனர். அப்பொழுது இரண்டும் பொருந்தி போனது, மேலும் 45வயது மதிக்கத்தக்க நபர் என்றும்,பதிவு செய்தனர். இந்த இடத்தில அனைவர்க்கும் ஒரு சந்தேகம்
எழலாம், முதலில் 25 வயது நபர் என்று வந்த ஆய்வு முடிவு எப்படி 45 வயதாக மாறியது என்று, அன்றைய காலகட்டத்தில் (1952) பெரிய
தொழிநுட்ப வசதி இல்லாததாலும்,உடல் மிகவும் மோசமாகவும் சிதைக்கப்பட்டிருந்தது.இதுபோன்ற
நடைமுறைசிக்கல்களால் தடவியல்துறையினரால் சரிவர கண்டறியமுடியவில்லை.இப்பொழுது இந்த
உடல் யாருடனுடையது என்பதை அறியவேண்டும், இதற்காக அண்மையில் பதிவுசெய்ய்யப்பட்ட
காணாமல் போன புகார்களுக்கு சம்பந்தமானவர்களை , அழைத்து அடையாளம் காட்ட
செய்தனர்.அப்பொழுது ஆளவந்தாரின் மனைவி இது தன கணவர் தான் என ஒப்புதல் அளித்தால், மேலும் இதனை
உறுதிசெய்ய , இவர் பிரித்தானிய ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பவரால், அங்கிருந்த
கைரேகை, உடல் அடையாளங்கள் மூலம் உறுதியும் செய்தனர்.
இதுவரை குழம்பிதவித்த காவல்துறையினர்
இப்பொழுது தீவிரவிசாரணையை தொடங்கினர், முதலில்
ஆளவந்தார் பற்றி விசாரிக்க தொடங்கினர், இவர் பேனா
மட்டுமல்ல புடவைகளை தவணைமுறையிலும் விற்றுவந்துள்ளார், அப்பொழுது பல பெண்களிடம் தொடர்பு வைத்துள்ளார் என்பது தெரியவந்தது.
அவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்த தேவகி
மேனன். 1951ல் ஆளவந்தாருடன் அறிமுகம் ஆகியுள்ளார்,
ஆளவந்தாரும் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பழகிவந்துள்ளார். நாளடைவில் இருவரும் கணவன் மனைவியாகவே வாழ ஆரம்பித்துள்ளனர்.சில
மாதங்களுக்கு பிறகு உண்மையை அறிந்த தேவகி, ஆளவந்தாரை விட்டுவிலகி பிரபாகர்
என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் ஆளவந்தார், தேவகியை
விடவில்லை தொடர்ந்து தன்னுடன் உறவுவைத்துக்கொள்ளுமாறு
வற்புறுத்தியுள்ளார்.பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமையிழந்த தேவகி, ஆளவந்தார்
தனக்கு தரும் தொல்லைகள் பற்றி தன் கணவரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த
பிரபாகர், ஆளவந்தாரை கொலை செய்ய முடிவு செய்தார்.அதற்காக திட்டமும் தீட்டினார், சம்பவநாளான்று தேவகி, ஆளவந்தாரை தனது 62, கல்லறை சாலையில்
உள்ள தனது வீட்டிற்கு வரச்சொல்லியுள்ளார். ஆளவந்தார் அங்கு வந்த பிறகு மறைந்திருந்த
பிரபாகர் பின்புறமாக தாக்கியுள்ளார்.பின்னர் இருவரும் சேர்ந்து கொலை செய்து அந்த
கொலையை மறைக்க ஆளவந்தாரின் தலையை தனியாக வெட்டி எடுத்துவிட்டு, கை கால்களை
தனித்தனியாக வெட்டி ஒரு பெட்டியில் அடைத்து சிலோன் விரைவு தொடர்வண்டியில்
வைத்துவிட்டனர். பின்னர் தலையை ஒரு சட்டையில் சுற்றி
ராயபுரம் கடற்கரையில் புதைத்துள்ளனர்.அதன்பின் பிரபாகரனும் தேவகியும் மும்பை
நகருக்கு தப்பி சென்றுவிட்டனர்.இதனை அறிந்த காவல்துறையினர் ,அவர்களை கைது
செய்து சென்னை வரவைத்தனர்.
1953ல் இவர்கள் மீதான கொலைவழக்கு ஆரம்பமானது, தேவகி மற்றும் பிரபாகரன் சார்பாக பி.டி.சுந்தர்ராஜன் என்ற வழக்கறிஞர் வாதாடினார்.ஏ .எஸ் .பி .ஐயர்.என்னும் நீதிபதி தலைமையில் பொதுமக்களால் ஆனா நடுவர் குழுமத்தின் முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்றது.( சிறிது ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை அதாவது பொதுமக்களால் ஆனா நடுவர் குழுமம் அமைத்து வழக்கு விசாரிக்கும் முறை கைவிடப்பட்டது ) தேவகிக்கு ஆதரவாக வாதாடிய சுந்தர்ராஜன் முக்கிய பதிவாக நீதிமன்றத்தில் முன்வைத்தது என்னவென்றால், தேவகியும் அவரது கணவரும்,ஆளவந்தாரின் தொடர் தொந்தரவு காரணமாகவே அவர் உயிரை பறித்தனர். அதனால் இந்நிகழ்வு கொலை அல்ல மரணம் விளைவித்தல் என்றனர்.கொலைக்கும் மரணம் விளைவித்தலுக்கும் என்ன வேறுபாடு என்றால்,
கொலை என்பது சட்டப்படி மிகப்பெரிய மற்றும் கொடிய குற்றம் ஆகும், மரணம் விளைவித்தல் என்பது எதிர்பாராத விதமாக,அதாவது கொலைசெய்யும் நோக்கம் இல்லாமல், உயிர் பறிக்கப்படுத்தல்.நீதிபதி ஐயர் தேவகி மற்றும் பிரபாகர் இருவரும் குற்றவாளிகள் என்று அறிவித்தனர்.ஆளவந்தார் தந்த தொடர் தொந்தரவின் காரணமாகவே கொலைசெய்துள்ளனர் என்பதால், மிகவும் குறைந்த தண்டனையை பிரபாகருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தேவகிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் வழங்கினர். அன்றைய (1952-53) கால கட்டத்தில் இந்த வழக்கு தடவியல் மற்றும் காவல் துறைக்கு பெரும் சவாலாக அமைந்தது.பின்னாளில் இந்த வழக்கு மருத்துவ பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
0 Comments