இன்று இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை நாடுமுழுதும் கொண்டாடி வருகிறது.இந்நிலையில் சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் நடந்த நாம் பெருமைப்படும் நிகழ்வுகள் பற்றிய ஓர் தொகுப்பே இதுவாகும்.
💜.முதல் அணு ஆயுத சோதனை - பொக்ரான்
1974ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் , ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் என்னுமிடத்தில் முதல் அணு ஆயுத சோதனை நடத்தி வெற்றிகண்டது. இவ்வெற்றி மூலம் இந்தியா அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இணைந்தது.
💜.முதல் செயற்கைகோள் - ஆரியபட்டா
1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் , முதல் முதலாக ஆரியபட்டா என்ற செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இப்பெயர் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
💜.முதல் நோபல் பரிசு அமைதிக்காக - அன்னை தெரசா
1979ம் ஆண்டு அன்னை தெரசா அவர்களுக்கு, அவர்கள் ஆற்றிய தொண்டு செயல்களின் காரணமாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
💜.முதல் மட்டைப்பந்து உலககோப்பை - இந்தியா
1983ம் ஆண்டு கபில் தேவ் அவர்களின் தலைமையிலான இந்திய மட்டைப்பந்து அணி , முதல் உலகக்கோப்பையை வென்று இந்திய மட்டைப்பந்து ரசிகர்களை மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தியது.
💜.கார்கில் போரில் - இந்தியா
1999ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே ஏற்பட்ட கார்கில் போரில் இந்தியா, பாகிஸ்தானை வென்று "TIGER HILL" என்ற பகுதியை மீண்டும் நம் வசம் கொண்டுவந்தது.
💜.இந்தியா வென்ற ஆஸ்கார்
2009ம் ஆண்டு இசையமைப்பாளர் எ.ஆர். ரகுமான் அவர்கள் "SLUMDOG MILLIONAIRE " என்ற படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகைளை வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.💜.போலியோ இல்லா நாடு - இந்தியா
மிகவும் கொடிய நோய்களில் ஒன்றாக பெரிதும் அச்சமுறுத்திய நோய் போலியோ. முந்தய காலகட்டத்தில் பல உயிர்களை கொன்ற இந்நோயினை நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு முற்றிலுமாக குணப்படுத்தினர்.2014ம் ஆண்டு இந்தியா போலியோ நோயற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
0 Comments