உலகின் மிகவும் ஆபத்தான, மனித உயிர்கள் வாழ தகுதியற்ற இடங்கள் பகுதி-2 (WORLDS DANGEROUS PLACES PART 2 )

 1)  லும்புக்கூடு கடற்கரை  -  (SKELETON COAST)

                இது நமீபியாவின் அட்லாண்டிக் கடற்கரையின் வட பகுதி முதல் அங்கோலாவின் தெற்கே குனேன் மற்றும் ஸ்வாகோப் நதிவரை பரவியுள்ள கடற்கரை பகுதியாகும்.இந்த பகுதி கடவுளின் கோபத்தால், சாபத்தால் உருவானது என்றும், போர்ச்சுகீசிய மாலுமிகள் இந்த பகுதியை நரகத்தின் வாயில்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.இங்கு குளிர்ந்த நீரோட்டம் ஆண்டின் பல மாதங்கள் அடர்த்தியான மூடுபனியை உருவாக்குவதால் இந்த கடலில் கப்பலை செலுத்துவது மிகவும் கடினம்.மேலும் நிலத்தில் இருந்து கடலை நோக்கி காற்றுவீசுவதால் மழை பொழிவு என்பது அரிது.அதிக பட்சமாக ஆண்டிற்கு 10 மில்லிமீட்டர் அளவு மட்டுமே மழை பொழிகிறது.இந்த பகுதியில் பருவநிலை மிகவும் முரணானது, ஆகையால் நிலப்பகுதி வழியால் மட்டுமே இந்த இடத்தை  கடக்க முடியும்.அந்த நிலப்பகுதியும் பல நூறு கிலோமீட்டர் நீளமுள்ள சதுப்பு நில பாலைவனம் ஆகும்.அதிக வெப்ப நிறைந்த பகுதியும் கூட.

2) னாகில் பாலைவனம் ( DANAKIL DESERT )

                         தனாகில் பாலைவனம் வடகிழக்கு எத்தியோப்பிய,தெற்கு எத்தியோப்பியா, மற்றும் வடமேற்கு பிஜிபௌடிய பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளது.இதன் பரப்பளவு 1,36,956 சதுரகிலோமீட்டர் (52,879 சதுர மைல்). இந்த பகுதி முழுதும் அதிக எரிமலைகள் நிறைந்துள்ளது, அதிக வெப்பத்திற்கு பெயர்போன இடமாகும்.இங்கு மனிதர்கள் வாழ மிக கடினமான சூழல் நிலவும் நிலையில் உப்பு சுரங்கத்தில் பணிபுரியும் ஒரு சிலர் மட்டும் வசித்துவருகின்றனர்.பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 50 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.ஆண்டுக்கு 25 மில்லிமீட்டர் அளவே மழை பொழிகின்றது. பூமியின் நிலப்பகுதிகளில் அதிக குளிர்ந்த மற்றும் வெப்பம் நிறைந்த பகுதியாக இந்த இடம் விளங்குகிறது.இந்த பாலைவனத்தை சுற்றி நிறைய பள்ளத்தாக்குகள் உள்ளன, ஆனால் இவற்றில் நீருக்கு பதில் வெறும் உப்பு மட்டுமே படிந்துள்ளது.காரணம் இந்த பகுதியில் வெப்பம் அதிகமாக இருப்பதால் மழை நீர் பள்ளத்தாக்கில் தேங்கும் முன்னே ஆவியாகி நீரில் இருக்கும் உப்பு படலமாக பள்ளத்தாக்கு முழுதும்  படிந்துவிடுகின்றது.

 

3) ரகத்தின் வாசல் ( GATES OF HELL )

                                        சீனாவில் பெங்டு கோஸ்ட் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நரகத்தின் வாயில்கள் அமைந்துள்ளன.குறிப்பாக எரிமலை பகுதிகளில், ஏரிகளில், மலைக்குகைகளில் காணப்படுகின்றது.இந்த இடங்கள் இன்றளவும் அமனிசியங்கள் நிறைந்த பகுதியாகவே கருதப்படுகிறது.இந்த கதவுகள் பாதாள உலகத்திற்க்கான நுழைவாயில் என பல புராண கதைகள் கூறுகின்றன.அந்த பகுதியில் நிலவும் அசாதாரணமான புவியியல் செயல்பாடுகள் இதனை நம்பச்செய்கின்றது.பண்டைய கிரீஸ் மற்றும் ரோம் நாட்டு மக்களை இந்த நுழைவாயிலை பயன்படுத்தி கடத்தி சென்றுள்ளனர்.இது போன்ற பல கதைகள் அந்த இடத்தை சுற்றி நிறைந்திருப்பதால் உலக மக்கள் அனைவரும் மிக ஆபத்தான பகுதியாக இதனை கருதுகின்றனர். பல ஆராச்சியாளர்கள் அந்த இடத்தை பற்றி பல விளக்கங்கள் கூறினாலும், அதனை உறுதிசெய்ய போதுமான ஆதாரங்கள் இலலாதல், அதுவும் கதைகளாகவே சுற்றித்திரிகிறது.

 

4) டக்கு சென்டினல் தீவு - (NORTH SENTINEL ISLAND)            

                                அந்தமான் தீவுகளில் வடக்கு சென்டினல் தீவு.வங்காள விரிகுடாவில் உள்ள தீவுக்கூட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.இங்கு பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர்.வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல், செயற்கையில்லாது இயற்கையை மட்டுமே சார்ந்து வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் வெளிமனித தொடர்பை விரும்புவதில்லை, வெளியாட்கள் அங்கு வருவதையும் அவர்கள் விரும்புவதில்லை.இதனால் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டம் 1956 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.இச்சட்டத்தின் படி வெளிமனிதர்கள் சென்டினல் தீவிற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது.அந்த தீவினை சுற்றி 9.26 கிலோமீட்டர் (5 மைல் ) சுற்றளவில் இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு பாதுகாக்க முக்கிய காரணம், இதற்கு முன்பு அங்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் இல்லை என்பதே.அவர்கள் அனைவரும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.இருப்பினும் இந்திய அரசாங்கம் அவர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்யாமல் பாதுகாத்து வருகின்றனர்.இதனாலேயே இந்த தீவு மிகவும் ஆபத்தான பகுதியாக குறிப்பிடப்படுகின்றது.இருப்பினும் உலகிலேயே இங்கு மட்டுமே மனிதன் வாழ்கின்றான்.

5) டிடி தேசிய பூங்கா  - ( MADIDI NATIONAL PARK )        

                              மடிடி தேசிய பூங்கா, பொலீவியாவின் மேல், அமேசான் நதிப்படுகையில் அமைந்துள்ள தேசிய பூங்கா ஆகும். இது 1995ம் ஆண்டு நிறுவப்பட்டது.இதன் பரப்பளவு 18,958 சதுரகிலோமீட்டர்.மடிடி உலகின் மிகப்பெரிய பாதுகாக்கபட்ட பகுதிகளில் ஒன்றாகும்.இந்த பூங்காவில் உயரமான பகுதியில் அதிக குளிர் நிறைந்தும், தாழ்வான பகுதியில் அதிக வெப்பம் மிகுந்தும், இடைப்பட்ட பகுதியில் மிதமான வெப்பநிலையும் நிலவுகின்றது.இந்த பகுதியில் சராசரி வெப்பநிலை ஆண்டுக்கு 26 டிகிரி செல்சியஸ், ஆனால் உயரத்தை பொறுத்து இது மாறுபடும்.இங்கு மழைக்காலத்தில் அதிகளவு மழை பொழியும், கோடைகாலத்தில்  காலத்தில் அதிகளவு வறட்சி மிகுந்தும் காணப்படும்.தோராயமாக ஆண்டிற்கு 716 மில்லிமீட்டர் வரை மழை பொழிந்துள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரை மழைக்காலம்,மே மாதம் முதல் செப்டம்பர் வரை கோடை காலம்.இங்கு நிலவும் நிலையற்ற பருவநிலையே  மனிதர்கள் வாழ தகுதியற்ற சூழலை ஏற்படுத்துகிறது.

Post a Comment

0 Comments