மிஸ்கின், தமிழ் திரையுலகில் உள்ள தனித்துவம் வாய்ந்த இயக்குனர்களில் ஒருவர். இவரது படங்கள் ஒவ்வொன்றும் கூறும் மிஸ்கின் என்றாள் யார் என்று. இவர் படங்களில் ஆங்கில படங்களின் தாக்கம் அதிகமாக இருப்பினும், அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.சமீப காலமாக இவர் இயக்கம் தாண்டி நடிகராகவும் முத்திரைப்பதித்து வருகிறார். குறிப்பாக, லியோ மற்றும் மாவீரன் படத்தில் மிஸ்கின் அவர்களின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
2017ம் ஆண்டு விஷால் தயாரித்து நடித்த துப்பறிவாளன் படத்தை மிஸ்கின் இயக்கியிருந்தார் , இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தினை இயக்க திட்டமிட்டனர். அனால் நடிகர் விஷால் அவர்களுக்கும் மிஸ்கின் அவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக , இப்படத்திலிருந்து வெளியேறினார் மிஸ்கின்.
இதன் பிறகு இவர் கலைப்புலி S .தாணு அவர்களின் தயாரிப்பில் விஜய்சேதுபதி அவர்களை நாயகனாக வைத்து "ட்ரெயின் " என்ற படத்தினை இயக்கி வருகிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மிஸ்கின் , இத்திரைப்படம் குறித்த பல தகவல்களை கூறினார்,
மிஸ்கின் :- " 10 வருடங்களுக்கு முன்பு நந்தலாலா படத்தை தாணு அவர்கள் தான் தயாரிக்கவேண்டியிருந்தது , ஆனால் அப்படத்தின் கதை அவருக்கு பிடிக்காத காரணத்தால் , அன்று இணையமுடியவில்லை. இன்று என் நீண்ட நாள் காத்திருப்பு, ட்ரெயின் திரைப்படம் மூலம் நிறைவேறியுள்ளது".
0 Comments