1) மரண சாலை - Death Road
வடயுங்காஸ் சாலை, பொலிவியாவில் உள்ள லா பாஜ் மற்றும் யுங்காஸ் பகுதியை இணைக்கும் 60 கிலோமீட்டர் சாலை.இந்த சாலை இருசக்கர வாகனங்களுக்கானது,செல்லும் வழியில் நிறைய அருவிகள்,நிலச்சரிவு பகுதிகள் என பல தடைகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2000 அடி (610 மீட்டர்) உயரத்தில் உள்ள இந்த சாலையில் ஆண்டிற்கு 300க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் இறக்கின்றனர்.இந்த சாலை அமேசான் மழைக்காடுகள் வழியே பயணிக்கிறது என்பது கூடுதல் தகவல்.
2)பாம்புகளின் தீவு - Snake Island
பிரேசிலில் சாவோபுவுலோ மாகாண கடற்பரப்பில் இருந்து சுமார் 31 கீலோமீட்டர் தொலைவில், 43000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.கடல்மட்டத்தில் இருந்து 206 மீட்டர் உயரத்தில் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மழைக்காடுகளால் சூழ்ந்துள்ளது.இத்தீவு முழுக்க மிகவும் நச்சுத்தன்மை நிறைந்த கொடிய பாம்புகள் நிறைந்துள்ளன.குறிப்பாக கட்டுவிரியன் வகை பாம்புகள் மிகவும் அதிகமாக உள்ளன.இந்த தீவில் சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு நச்சு பாம்பு இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் இந்த தீவு மனிதர்கள் வாழ தகுதியற்றது என தடைசெய்யப்பட்டுள்ளது.
3) நட்ரோன் ஏரி - Lake Natron
கிழக்கு
ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டின் வடக்கில் அருஷா பிரதேசத்தில் கென்யாவின்
எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.இந்த ஏரி முழுதும் சகதியால் நிரம்பியிருக்கும், வெறும் 3 மீட்டர் ஆழம்
மட்டுமே கொண்டதாக இருந்த போதும், இதன் நீள
அகலம் மழை அளவை பொறுத்து மாறுபடும்.மழைக்காலங்களில் இந்த ஏரி 57 கிலோமீட்டர் நீளமும், 22 கிலோமீட்டர் அகலமும் கொண்டிருக்கும்.இந்த
ஏரியின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்.இந்த ஏரியை சுற்றியுள்ள
எரிமலைகள் கக்கும் எரிமலைக்குழம்புகள் ஏரியில் கலப்பதால், நீர்
வெப்பமடைந்து, ஆவியாவதால், சோடியம்
கார்போனேட் , கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை
செந்நிறத்தில் படிந்திருக்கும். நீரில் உப்பின் தன்மை அதிகமாக இருப்பதால்
மனிதர்கள் மற்றும் விலங்குகள் குடிப்பதற்கு உகந்தது அல்ல. ஒரு சில குறிப்பிட்ட
மீன் மற்றும் நாரை வகைகள் மட்டும் இந்த ஏரியில் வசிக்கின்றது என்பது
குறிப்பிடதக்கது.
4) ஓயமயாகோன் - Oymyakon
கிழக்கு
உருசியாவின் சைபீரிய பகுதியில் ஓயமயகோன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
ஆகும்.இண்டிகிர்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கிராமம், உலகின் மிகவும் குளிரான பகுதி ஆகும்.இந்த
கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 500 ஆகும்.அண்டார்டிக்காவிற்கு
வெளியே அமைந்துள்ள இந்த கிராமம், கடல்மட்டத்தில்
சுமார் 750 மீட்டர் உயரத்தில் உள்ளது.இங்கு
குளிர்காலத்தில் சூரிய ஒளி மதியம் 3 மணி வரை
மட்டுமே இருக்கும். இங்கு குளிர் எந்த அளவிற்கு இருக்குமென்றால், பல நாட்கள் குடிநீர், குழாய்களிலே உறைந்து போய்விடும்.இங்கு
வாழும் மக்களின் அன்றாட தேவைக்காக ஒரே
வணிக தளம் உள்ளது. இங்கு உள்ள மக்கள் போக்குவரத்திற்கு மாடுகள் மற்றும்
குதிரைகளையே பயன்படுத்துகின்றனர்.
5) மரண பள்ளத்தாக்கு - Death Valley
இது கிழக்கு கலிபோர்னியாவில் உள்ள பாலைவன பள்ளத்தாக்கு ஆகும். வட அமெரிக்காவை பொறுத்தவரை இந்த பள்ளத்தாக்கே மிகவும் தாழ்ந்த,வறண்ட ,வெப்பமான பகுதி ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து சுமார் 282 அடி (86 மீட்டர் ) தாழ்வாக அமைந்துள்ளது.1913ம் ஆண்டு வெப்பநிலை கணக்கிடப்பட்ட பொழுது, 134 டிகிரி பாரன்ஹீட் (56.7 டிகிரி செல்சியஸ் ) ஆக பதிவாகியுள்ளது. உலக அளவில் நிலப்பரப்பில் பதிவான வெப்பநிலைகளில் இதுவே மிகவும் அதிகமானது ஆகும். இந்த பாலைவனத்தில் யாரேனும் வழிதவறி சென்றால் , உயிர்பிழைப்பதென்பது மிகவும் கடினம். இந்த பகுதியில் வீசும் வெப்ப காற்று , வறண்ட வானிலை, நீண்ட பலவனப்பகுதி போன்றவைகளால் இது மனிதர்கள் வாழ தகுதியற்ற இடங்களில் ஒன்றாகும்.
0 Comments