காதல் மனைவிக்காக இது கூடவா பண்ணக்கூடாது ???

 


கோலிவுட் திரையுலகம் தாண்டி டோலிவுட் ,மாலிவூட் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது நயன்தாரா விக்னேஷ் சிவனின் காதல் திருமணம் தான்.

நயன்தாரா 2015ம் ஆண்டு விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் " நானும் ரவுடி தான் " திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். காமெடி கலந்த காதல் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தினை நடிகர் தனுஷின் "வுண்டர்பார் " நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பின் போதே இருவருக்கும் நட்பு மலர அது நாளடைவில் காதலாக பூத்துக்குலுங்கியது. இவர்களது காதல் திரையுலகில் பலரின் வயிற்றில் நெருப்பெரிய செய்தது. பின்னாளில் இவர்கள் பிரிந்துவிடுவர் என்று அனைவரும் நினைக்க, அவர்கள் வயிற்று நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றினார் விக்னேஷ் சிவன்.இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இன்று அவர்களுக்கு "உயிர்" மற்றும் "உலக்" என இரட்டை ஆண்குழந்தைகள் உள்ளனர்.


"ஊர் வயிற்றெரிச்சல் உடம்புக்கு நல்லதில்லை " என்பது போல திருமணத்திற்கு பிறகு அவர்களது திரைவாழ்க்கை சரிவர அமையவில்லை. இருப்பினும் இருவரும் புது புது முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். "9skin " என்ற பெயரில் அழகு சாத்தன் பொருட்கள், "Femi 9" என்ற பெயரில் பெண்களுக்கான நாப்கின் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.  

இந்நிலையில் விக்னேஷ் சிவன் , தான் நடத்திவந்த " ரவுடி பிக்ச்சர்ஸ்" நிறுவனத்தின் தலைமையை தன் தலைவிக்கு விட்டுகுடுத்துள்ளார். அதனை அதிகாரபூர்வமாக தான் தயாரித்து இயக்கிவரும் LIK (Love Insurance Kompany ) படத்தின் முதல்பார்வையில் தெரிவித்துள்ளார்.  

தயாரிப்பு  - நயன்தாரா 


இப்படத்தினை லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் அவர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   


                                                                                                                       ந.மகேந்திரன்

Post a Comment

0 Comments