லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் படப்பெயர் மாற்றமா ???

 

 

டந்த 2019 ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த "கோமாளி " திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 2022ம் ஆண்டு "லவ் டுடே" என்னும் படத்தினை இயக்கி நடிக்கவும் செய்திருந்தார்.லவ் டுடே திரைப்படம் இன்றைய 2k கிட்ஸ்களின் காதலை மையப்படுத்தி அதனை தனக்கே உரித்தான நகைச்சுவை மற்றும் எமோஷனல் கலந்த திரைப்படமாக கொடுத்திருந்தார். இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. அதன் விளைவு பல இயக்குனர்கள் பிரதீப்பின் அடுத்த படத்தை இயக்க போட்டிபோட தொடங்கினர்.அப்படி தொடங்கிய படங்களில் ஒன்று இயக்குனர் விக்னேஸ்சிவனின் LIC ( Love Insurance Corporation ).

விக்னேஷ் சிவன் மீது யார் கண்பார்வை பட்டதோ , அவர் கால் வைக்குமிடமெல்லாம் கண்ணிவெடியாக உள்ளது.கடைசியாக இவர் விஜய்சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் "காத்துவாக்குல ரெண்டு காதல் " கலவையான விமர்சனங்களையே பெற்றது.அடுத்ததாக லைக்கா நிறுவன தயாரிப்பில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட அஜித் அவர்களின் 62வது படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் கைநழுவி சென்றது. அதன் பின் பிரதீப்பை வைத்து ஆரம்பித்த படம் தான் LIC.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. தொடங்கியது படப்பிடிப்பு மட்டுமில்ல பிரச்சனைகளும் தான். இப்படத்தின் தலைப்பபின் உரிமத்தை  ஏற்கனவே வேறொருவர் வைத்திருந்த நிலையில், இவர்கள் அறிவித்தது அவர்களுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில் இப்படத்திற்கான தலைப்பை மாற்ற வேண்டும் என விக்னேஷ் சிவனிற்கு நெருக்கடி அளிக்கப்பட்டது.வேறுவழியின்றி படக்குழு அப்படத்தின் புதிய பெயரை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

L I K  ( Love Insurance Kompany ). 

ஆகா தமிழ் படத்திற்கு மிகவும் அழகான ஆங்கில பெயர் கிடைத்துவிட்டது.


                                                                                                                       ந.மகேந்திரன்


 

Post a Comment

0 Comments