விரைவில் கைதி 2 , இணையும் வெற்றிக்கூட்டணி, தொடங்க போகுது லோகி சினிமாட்டிக் யூனிவெர்ஸ் !


 யக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்திக் கை கதையின் நாயகனாக வைத்து இயக்கிய படம் கைதி.இப்படம் 2019ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியானது.போதைப்பொருள் கடத்தும் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் காவல்துறை உயரதிகாரிகளை ஒரு கைதி எப்படி காப்பாற்றினார் என்பதே ஒருவரிக்கதை. இக்கதைக்குள் தந்தை மகளின் பாச பிணைப்பு ,ரவுடிகளின் பழிவாங்கும் உணர்வு , கடமை தவறா காவல்துறை அதிகாரி என பலவிதமான கதாபாத்திரங்களுடன், படமும் ஒரு இரவில் நடப்பது போன்று மிகவும் வித்தியாசமான முறையில் படமாக்கியிருந்தார்.


கதையும், லோகியின் அணுகுமுறையும் படத்தினை மிகப்பெரிய வெற்றிப்படமாகியது. நடிகர் கார்த்தியின் திரைவாழ்வில் பருத்திவீரனுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றிபடமென்றால் அது கைதிதான்.அதிலும் தீபாவளி அன்று விஜய் - அட்லீ கூட்டணியில் பிகில் திரைப்படத்துடன் கடும் போட்டிக்கு நடுவில் வெளியாகி மிகப்பெரியவெற்றிபெற்றது.கூடுதலாக இப்படத்தில் பாடல்கள் இல்லை , கதாநாயகி இல்லை , போன்ற விளம்பரங்களே தெரிவிக்கறது , நாம் எந்தளவுக்கு பாதிக்கட்டுள்ளோம் என்று.கைதி படத்தின் வெற்றி லோகியை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது.இதன் விளைவு விஜய் அவர்களை வைத்து " மாஸ்டர் " மற்றும் "லியோ " என இரண்டு படங்களை இயக்கினார். தனது குருநாதர் என கருதிய கமலஹாசன் அவர்களை வைத்து "விக்ரம்" என்ற படத்தினை இயக்கினார். விக்ரம் படத்தின் மூலம் தான் LCU ( Loki Cinematic Universe ) என்ற பாணியை அறிமுகம் செய்தார். 

விக்ரமின் வெற்றி லோகியை இந்திய அளவில் முக்கிய இயக்குனராக மாற்றியது.தற்போது அவர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து "கூலி " என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்தவுடன் 2025 மார்ச் மாதம் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தினை தொடங்க உள்ளனர். இதற்கான முன்பணமும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த பாகத்தில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் LCU கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு  கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.


                      

Post a Comment

0 Comments